அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் கலவரமடைவது ஏன்..?
- முன்ஸிப் -
அட்டாளைச்சேனை
பிரதேச சபையில் நடைபெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் மோசடிகள்
தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் கலவரமடைந்த, பிரதேச சபையின் சில
ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் எனும் பெயரிலான
நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
பிரதேச
சபைச் சட்டத்துக்கு விரோதமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும்
நிதி உதவியாளர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோர், அட்டாளைச்சேனை கூட்டுறவு
சங்கத்தில் தலைவர் மற்றும் உப தலைவர் பதவிகளை வகிப்பதாகவும், இதன் மூலம்
குறித்த நபர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாகவும்
தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து, ஊடகங்கள் ஏற்கனவே செய்திகளை
வெளியிட்டிருந்தன.
இதனால்,
கலவரமடைந்த சம்பந்தப்பட்ட நபர்கள் இருவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில்
கடமையாற்றும் பல ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்தி, இன்று ஆர்ப்பாட்டம் எனும்
நடவடிக்கையொறை நடத்தியதாகத் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனை
பிரதேச சபையின் கீழ் இயங்கும் வாசிகசாலைகளில் நூலக உதவியாளர்களாகவும்,
கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்றுகின்றவர்கள், கடமை நேரத்தில் பிரதேச
சபைக்கு நிர்ப்பந்தமாக அழைக்கப்பட்டு, இந்த ஆர்ப்பாட்டம் எனும்
நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு
நிறுவனம் அல்லது அதில் பணியாற்றும் நபர்கள் தொடர்பில், ஊடகங்கள் தவறானவை
அல்லது உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டால், குறித்த செய்திகளை
வெளியிட்ட ஊடகங்களுக்கு மறுப்பறுக்கையினை வழங்கி தெளிவுபடுத்துகின்றமைதான்,
உரிய நடைமுறையாகும்.
அதனை
விடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து செய்திகளை வெளியிட வேண்டாம்
என்று, பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர்களை வற்புறுத்தி, இவ்வாறான கேலிக்
கூத்துக்களில் ஈடுபடுதால், உண்மைகளை மறைத்து விட முடியாது என்று,
இதுதொடர்பில் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Post a Comment