Header Ads



மஹிந்தவும், கோட்டாபயவும் தண்டிக்கப்படமாட்டார்கள் - இலங்கை அரசு அறிவித்தது

ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது.
 
மஹிந்த பாதுகாக்கப்படுவார் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகிறார். அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மையில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறிய பிறகு முதல் முறையாக தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும், அதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முப்படையினர் ஆகியோர் காப்பாற்றப்படுவார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்று மேர்கொள்ளப்பட திட்டமிட்டிருந்தால், நாடு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு பெரிய பிரச்சினைகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. Since current Government is inefficient to take any action against the obvious wrongdoers in the previous regime, no need to declare this.

    ReplyDelete
  2. எதிர்பார்க்கப் பட்டதுதான். இபப்டியேதான் நடக்கும், வசீம் தாஜுதீன் கொலை வழக்கும்.

    ReplyDelete
  3. Y inquary y yaar y all toilet same

    ReplyDelete

Powered by Blogger.