அமைச்சர்களுக்கு தடையுத்தரவு - ரணில் அதிரடி
மோசடியான செயற்பாடுகள் தொடர்வதைத்தடுக்கும் நோக்கில் தனியார் துறை வர்த்தகர்களுடன் அமைச்சர்கள் நேரடி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு பிரதமர் தடைவிதித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் முன்னணி தனியார்துறை வர்த்தகர்கள் தங்கள் முறைகேடான செயல்களுக்கு அமைச்சர்களையும் இணைத்துக்கொண்டு, பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தங்கள் முறைகேடான செயல்களைத் தொடரும்வகையில் சில வர்த்தகர்கள் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு,
அமைச்சுகளின் செயற்திட்டங்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் தங்கள் முறைகேடான செயற்பாடுகளைத் தொடர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான தகவல்களின் காரணமாக தனியார் வர்த்தகர்களுடன் நேரடி இணக்கப்பாட்டில் எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சகல அமைச்சர்களுக்கும் தடையுத்தரவு விதித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையிலான குழுவொன்றின் அனுமதி பெறப்பட்டதன் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment