Header Ads



முஸ்லிம் இடம்பெயர் மக்களின், பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் - மங்கள சமரவீர

உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள உருவாகாமை தொடர்பிலான பொறிமுறையில் முஸ்லிம் சமூகமும் ஓர் முக்கியமான பங்குதாரர்கள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணை மற்றும் தீர்வுப் பொறிமுறைமையில் முஸ்லிம் மக்களின் கரிசனைகளும் உள்ளடக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அமைச்சுக்கள் அரசாங்க நிறுவனங்கள் ஆகியனவற்றை இணைத்து தீர்வுத்திட்டம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாளாந்தம் கஸ்டங்களை அனுபவித்து வரும் முஸ்லிம் இடம்பெயர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களினது பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தவரின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலருந்து முஸ்லிம் மக்கள்  வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 75000 முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சில தமிழர்கள் விமர்சனம் செய்வதாகவும், பெரும்பான்மையானவர்கள் நியாயப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் இன்னமும் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.