Header Ads



மணக்கோலத்தில் ஓடிவந்த பெண், வைரஸாக பரவிவரும் புகைப்படம்

அமெரிக்காவில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக மணக்கோலத்தில் ஓடிவந்த பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் டென்னஸ்லி மாநிலத்தை சேர்ந்த சாரா என்பவர் அவசர முதலுதவி சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், திருமணத்திற்காக கிளார்க்ஸ்வில்லி சாலையில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவரது உறவினர்கள் சென்ற கார் விபத்திற்குள்ளானதை கண்ட சாரா, அவர்களுக்கு உதவி செய்வதற்காக மணப்பெண் கோலத்திலேயே காரில் இருந்து இறங்கி வேகமாக ஓடியுள்ளார்.

இதனைப்பார்த்த சாராவின் தாயார், தனது மகள் மணப்பெண் கோலத்தில் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது சென்ற பொறுப்புணர்வை எண்ணி நெகிழந்துள்ளார்.

அது மட்டுமின்றி மணக்கோலத்துடன் ஓடி வரும் தனது மகளை புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது, ஆனால், இது ஒன்றும் தனக்கு புதிதான விடயமல்ல, என்னைப்போன்று அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுபவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள் என்று சாரா கூறியுள்ளார்.

3 comments:

  1. அபாரம் சாரா!

    ஒரு பொறுப்புள்ள பெண்ணாக பதில்கூறியிருக்கின்றீர்கள்! நானும் ஒரு பெண்ணாக பெருமையுறும் தருணங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  2. It's true, this the way of First Aid ( all first aid staff are training such way), and thanks for the real practice Sarah

    ReplyDelete
  3. மனித நேயம் உள்ள ஒவ்வொருவரினதும் கடமை இது. ஒருவருக்கு முதல் உதவி தேவைப்படும் போது நாம் உடனடியாக நிறம் மதம் ஆண் பெண் பாராது காரியத்தில் இறங்க வேண்டும். இவ்வாறான சந்தர்பத்தில் இஸ்லாம் எதை பொதுவாக ஹராம் செய்துள்ளதோ அது நிர்பந்தத்தின் மீது குற்றமாகாது.

    ReplyDelete

Powered by Blogger.