Header Ads



ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு, நான் பால் கொடுத்தேன் - மஹிந்த

சுயாதீன தொலைக்காட்சியினால் தனக்கு நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்ததன் பினனர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் சுயாதீன தொலைக்காட்சி நிர்வாகம் கொடுப்பனவு முறையை தயாரித்துள்ளதாகவும், தனது நத்தார் வாழ்த்து செய்திக்கும் அறவீட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஒருவரின் நத்தார் செய்தி அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்ற நிலையில், அதற்கான கொடுப்பனவை செலுத்த வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் பிரகாரம் சுயாதீன தொலைக்காட்சியே தனக்கு நட்டஈட்டை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தான் வன்மையாக கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என தான் ஜனாதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தான் பால் கொடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி தனக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

1 comment:

  1. நீர் பாம்புக்கு பால் கொடுத்து இந்த நிலைக்கு ஆளானீர் இப்போ மாணவர்களுக்கு பால் கொடுக்கின்றீர் என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை. மக்கள் மிகவும் தெளிவாக உள்ளார்கள். இந்த பருப்பு இனி வேகாது.

    ReplyDelete

Powered by Blogger.