Header Ads



ஹக்கீமும், ஹசனலியும்

-MI RISHAD-

 புத்திக்கூர்மையான  இளவரசன்  என்ன  செய்யவேண்டுமென்றால்  நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு  மாத்திரமல்ல  எதிர்காலப்  பிரச்சினைகளுக்கும் ச க்தியோடு தயார்  செய்யவேண்டும்.  சிறந்த  எதிர்வு கூறலோடு அவற்றைத்  தீர்க்க வேண்டும். நோய்  உக்கிரமடையும்  வரைக்கும்  காத்திருந்தால்  மருந்து  பயனளிக்காது. காரணம் நோய்  குணப்படுத்த  முடியாததாகிவிடும். வைத்தியர்கள்  கூறுவது  போன்று நோயின்  ஆரம்பத்தில்  நோயைக்  கண்டறிவது  கடினம்  ஆனால்  குணப்படுத்துவது இலகு. நோயைக்கண்டறியாமலும்  குணப்படுத்தாமலும்  விட்டால், நோய் உக்கிரமடைந்ததன்  பின்  அதனைக்  கண்டறிவது  இலகுவாக  இருக்கலாம்  ஆனால் குணப்படுத்துவது  இயலாததாகிவிடும் .அரசியல் வி வகாரங்களிலும்  இது பிரயோகிக்கப்படுகிறது. தலைமை  தனக்கு  எதிர்வரும்  சவால்களை  முன்கூட்டியே எதிர்வு  கூறினால்  அவற்றை  வேகமாகத்  தீர்த்துவிடலாம். அவற்றை  எல்லோரும் காணுமளவிற்கு   வளரவிட்டால்   அதன்பின்  அவற்றிற்கு   ஒரு  தீர்வு  இருக்காது.

(-இளவரசன் ,நிக்கலோ  மாக்கியவல்லி, அத்தியாயம்  மூன்று)

சுமார்  500  வருடங்களுக்கு  முன்னர்  நிக்கலோ  மாக்கியவல்லி  எழுதிய  அரசியல் ராஜந்திரம்  இன்று  முஸ்லீம்  காங்கிறசின்  தலைவர்  ரஊப்  ஹகீம்  அவர்களுக்கு சரியாகப்  பொருந்துகிறது. அட்டாளச்சேனைக்கு  வாக்களிக்கப்பட்ட  தேசியப்பட்டியல்  இன்று  ஹசனலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது .அக்கரைப்பற்றிற்கு  வாக்களிக்கப்பட்ட  சுகாதார  அமைச்ச்சர்  பதவி  அட்டாளச்சேனைக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் கட்சி  எதிர்  நோக்கிக்  கொண்டிருந்த  அரசியல்  குழறுபடியை  சுமூகமாகத்  தீர்த்து வைத்ததாக  ஹக்கீமும்  அவரின்  கண்மூடித்தனமாக  விசுவாசிகளும்  நினைத்துக் கொள்ளலாம்.

ஹசனலி  தனக்கு  தேசியப்பட்டியல்  தராவிட்டால்  கட்சியைப்  பிரித்து எடுத்துகொண்டு  போகப்  போவதாக  கூறிய  மிரட்டலால்  அட்டாளச்சேனைக்கு வாக்களிக்கப்பட்டிருந்த  தேசியப்பட்டியல்  ஹசனலிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அட்டாளச்சேனையை திருப்திப்படுத்துவதற்காக  அக்கரைப்பற்றிற்கு வாக்களிக்கப்பட்ட  சுகாதார  அமைச்சு  அட்டாளச்சேனைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்கரைப்பற்று  மீண்டும்  ஒரு  முறை  காங்கிறசால் ஏமாற்றப்பட்டிருக்கிறது.
இத்தனை  குழப்பங்களுக்கும்  காரணம்  தேசியப்பட்டியல்  ஹசனலிக்கு கொடுக்கப்பட்டதே. ஏன்  கொடுக்கப்பட்டது  என்று  கேட்டால் ‘ என்ன செய்வது இல்லாவிட்டால்  கட்சியைப்  பிரித்துக்  கொண்டு  போவார்  என்கிறாரே  என்று பதிலளிக்கிறார்கள். கட்சியை  உடைக்காமல்  எவ்வளவு  சாதூர்யமாகத்  தலைவர் கையாண்டிருக்கிறார்  என்று  மூக்கில்  விரலை  வைத்துக்  கொள்கிறார்கள்  அவரின் விசுவாசிகள்.

ஆனால்  அரசியலை  ஆழமாக  நோக்கினால்  ஹசனலியின்  நியமனம்  ஹக்கீமின் சாதூர்யத்தை  விட  அவரின்  இயலாத  தன்மையைத்தான்  எடுத்துக்காட்டுகிறது. ஆரம்பத்திலிருந்தே  ஹசனலி  ஹக்கீமோடு  முட்டிகொள்பவர். செயலாளர்  என்ற துரும்பைப்  பாவித்து  அவர்  தனது  தேசியப்பட்டியலை  தக்கவைக்க முனைபவர். தேசியப்பட்டியல்  நியமனங்களின்  போதெல்லாம்  இவ்வாறான  குழப்பங்களை உண்டு பண்ணி  மக்கள் தலைமையைக்  காறித்துப்பும்  அளவிற்கு  கொண்டு வருபவர். சுருக்கமாகச்  சொல்லப்போனால்  காங்கிறசின்  வளர்ச்சிக்கு  ஒரு முட்டுக்கட்டையாக  இருப்பர்  ஹசனலி. கட்சிவளர  வேண்டும்  என்பதை  விட தான்  வளர  வேண்டுமென்று  நினைப்பவர்.

இப்படியான  ஹசனலி  போன்ற  நோய்களை  ஆரம்பத்திலேயே  அடையாளம் காண  வேண்டியது  ஆட்சியாளனின்  கடமை  என  மாக்கியவல்லி கூறுகிறார் .இல்லாவிட்டால்  அது குணப்படுத்த  முடியாததாகிவிடும்  என்றும், ஆரம்பத்திலேயே  அடையாளம்  காணாது  விட்டால்  பின்னர்  பெரிதாகி எல்லோருக்கும்  தெரிந்துவிடும்  என்கிறார்  மாக்கியவல்லி. இன்று  ஹசனலி காங்கிறஸின்  குணப்படுத்த  முடியாத  ஒரு  நோயாக  மாறிவிட்டார். அந்த  நோயை வளரவிட்ட  அனைத்துப்  பழியையும்  ஹக்கீமே  ஏற்கவேண்டும்.

ஹசனலியின்  போக்கு  ஒன்றும்  புதிதல்ல. அவர்  தொடர்ந்தும்  அதைச் செய்து வருபவர். அது  தெரிந்திருந்தும்  அவரை  கட்சியில்  உயர்  தானத்தில்  வைத்திருந்தது  ஹக்கீமின்  மிகப்பெரிய  தவறு. அவர்  இப்படிப்படவர்தான்  என்று தெரிந்ததன்  பின்னர்  அதற்கான  அரசியல்  வியூகங்களை  அமைக்காமல் தலைமையின்  தலைக்கே  வேட்டுவைக்குமளவிற்கு  அவரை  வளரவிட்டது ஹக்கீமின்  தலைமத்துவப்  பண்புகளின் மீது  கேள்விகள்  கேட்க  முனைகிறது. ஒரு தனிமனிதனின்  மிரட்டலுக்காக  கட்சியின்  முடிவையே  மாற்றுமளவிற்கு எதிரியை  ஹக்கீம்  வளரவிட்டிருக்கிறார்.

ஹசனலிக்கு  கொடுத்ததனால்  ஏற்பட்ட  விளைவுகளை  சீர்  செய்வதிலேயே  இனி காங்கிறசின்  காலம்  கழிந்துவிடும். ஹசனலிக்கு  தேசியப்பட்டியல்  கொடுக்கப்பட்டதனால்  அனாவஸ்யமாக ஏற்கனவே  ஒரு  பிரதி  அமைச்சர்  இருக்கும்  நிந்தவூருக்கு  இன்னொரு  ஆசனம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு  ஒரு  பிரதேசத்திற்கு  குறிப்பாக  அட்டாளச்சேனைக்கு கொடுத்திருந்தால்  எதிர்வரும்  பிரதேச  சபைத்தேர்தலில்  அது  பல  வாக்குகளை காங்கிறசுக்கு  கொடுத்திருக்கும் .அத்தோடு  அட்டாளச்சேனையில் அதாவுல்லாஹ்வுக்கு இருக்கும் மிஞ்சிய ஒரு சில ஆதரவும் காங்கிறசுக்கு கிட்டியிருக்கும்.

அக்கரைப்பற்றிற்கு  வாக்களிக்கப்பட்ட  சுகாதார  அமைச்சர்  பதவி  அக்கரைபற்றிற்கே  கொடுக்கப்பட்டிருந்தால்  காங்கிறசுக்கு  அக்கரைப்பற்றின் வாக்குகளை  எதிர்வரும்  தேர்தலில்  கணிசமாகக்  கூட்டிருக்கலாம். வாக்களிக்கப்பட்டவாறே  அட்டாளச்சேனைக்கு  கொடுக்கப்பட்டிருந்தால்  தலைவர் வாக்குத்தவறாதவர்  என்ற  நற்பெயர்  கிட்டியிருக்கும். அந்த  நற்பெயர் ஹக்கீமுக்கு  இக்காலகட்டத்தில்  கடுமையாகத்  தேவைப்படும்  ஒன்று. இதனால்  ஹக்கீம்  வாக்களித்தால்  மாறு  செய்வார். தேர்தல்  காலங்களில்  தரும் அவரின்  வாக்குறுதிகளை  நாம்  நம்பவே  கூடாது  என்ற  எண்ணம்  மக்களின் மத்தியில்  உருவாகிவிட்டது. ஹக்கீமால்  இப்பெரிய  கட்சியை  கொண்டு  செல்ல முடியாது  என்று  தெளிவாகிறது. தனக்கு  எதிரானவர்  என்று  தெரிந்தும்  மீண்டும்  ஹசனலியை  ஆட்சிபீடம் ஏற்றியிருப்பது  உள்வீட்டுக்குள்  புலியைக்  கட்டிக்கொண்டு  வாழ்வதற்கு  ஒத்தது என்பதை  ஹக்கீம்  மறந்துவிட்டார்.

ஹசனிலியை  அவர்  அடக்கியிருக்கவேண்டும்  இல்லாவிட்டால்  மடக்கியிருக்க வேண்டும். அவரை  இத்தனை  தூரம்  வளரவிட்டு  கட்சி  நினைத்ததை  செய்ய முடியாமல்  ஹசனலி  நினைத்ததை  செய்வதற்கு  ஹக்கீம்  தள்ளப்பட்டிருக்கிறார் என்றால், கட்சியின்  நலனைவிட  ஹசனலியின்  நலனைத்தான்  ஹக்கீமால் காப்பாற்ற  முடிகிறது  என்று  அர்த்தம் .அப்படி  என்றால்  ஹக்கீம்  என்பவர் காங்கிறஸ்  என்ற  கட்சிக்கு  எதற்கு  என்ற  கேள்வி  எழுகிறது. எதிரியை  வளரவிடுவது  அரசியலில்  எத்தனை  ஆபத்தானது  என்பது  ஹக்கீமுக்கு தெரியாது  போலும் .அரசியலில்  எதிரியை  அழித்தால்  மட்டும்  போதாது. வேரோடு அழிக்கவேண்டும். இல்லாவிட்டால்  வளர்ந்து  கொண்டே  இருக்கும். இதற்கு ஹசனலி  ஒரு  உதாரணம். ஹசனலி  இந்த  ஆட்டத்தில்  தான்  நினைத்ததை சாதித்திருக்கிறார். ஹக்கீம்  ஹசனலியிடம்  படு  தோல்வியடைந்திருக்கிறார்.

ஹசனலி, ஹக்கீம்  இருவருக்கிடையிலான  பலப்பரீட்சையில்  எவர்  சரியானவர் என்பதை  ஆராய்வது  இப்பதிவின்  நோக்கம்  அல்ல. இப்பதிவு  ஹக்கீம்  அவர்கள் கட்சிக்கும்  பூதாகரமாக  வெடிக்கும்  பிரச்சினைகளை  சூட்சுமமாக  தீர்ப்பதற்கு திராணி  இல்லாதவர்  என்பதை  உறுதிப்படுத்த  விழைகிறது. கட்சியில்  ஒரு  முடிவு  வரும்  வரைக்கும்  தனது  இரு  நம்பிக்கைக்குரிய சகோதரர்களுக்கு  ஆரம்பத்தில்  தேசியப்பட்டியலைக்  கொடுப்பது  ஹக்கீமின் பண்பாகிவிட்டது. ஆனால்  அது  அவருக்கு  தலைமைத்துவம் வராது  என்பதைத்தான்  காட்டுகிறது .நேரத்திற்கு  முடிவுகள்  எடுக்க  முடியாத கையாலாகாத  தலைமைத்துவம்  தான் இது  என்பதனையே  காட்டுகிறது.

ஹனசலிக்கு  என்ன  மருந்து  கட்டியிருக்க  வேண்டும்  என்று கேட்டால்  அதைப் பகிரங்கமாக  இங்கு  பேச  முடியாது.அதைக்  கண்டுபிடிக்க மு டியாத ஒருவர் அரசியலில்  தலைவராக  இருந்தும்  பயனில்லை. ஒன்றை  மட்டும்  சுருக்கமாகக் கூறலாம். ஹக்கீம்  காங்கிறசின்  தலைவராக இருக்கும்  வரைக்கும்  காங்கிறஸ்  பலவீனப்பட்டுகொண்டே  செல்வதோடு மட்டுமல்ல  ஏனைய  கட்சிகளுக்கும்  அது  ஒரு  மிகப்பெரும்  வாய்ப்பாக அமையும். காங்கிறசா  ஹக்கீமா  என்ற  முடிவுக்கு  கட்சியின்  ஆதரவாளர்கள் வரவேண்டிய  தருணமிது.

12 comments:

  1. No need too much writing about these two useless men. They should not handle SL Muslim politics.

    ReplyDelete
  2. naan ethai ninaiththano athai eluthi irukkireerkel , matumallamel unmaiyai unmaiyai solli irukkireerkel . Thanks, SLMC ikku alle aresiyalukka layakkillathe , iduppil palem illathe oru manither than inde Hakeem .

    ReplyDelete
  3. ஒரு முனாபிக்குடைய அடையாளங்கள் மூன்று

    1.பேசினால் பொய் பேசுவான்
    2. வாக்களித்தால் மாறு செய்வான்
    3.நம்பினால் ஏமாற்றுவான்.

    ஹஸனலி போன்ற உறங்கு நிலை அரசியல்வாதிகளுக்கு தேசியப் பட்டியல் அவசியமா? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசப்பற்று அல்ல தேசியப் பட்டியல்.

    ReplyDelete
    Replies
    1. தேசிய பட்டியலின் நோக்கமே, அரசியல் / நிபுனுவத்துவம் கொண்ட அறிவு ஜீவிகளை பா.ள மன்றம் கொண்டு செல்வதே...!!! (சிலர் பகிரங்க அரசியலில் ஈடுபட விரும்பாமல் இருப்பவர்களுமே! )

      ஆக ஹசனலி என்பவர் முழு தகுதியுடைவர்....!!! பா.ள மன்ற உறுப்பினராவதற்க்கு...,


      அத்தோடு, அன்றிலிருந்து இன்று வரைக்கும் கட்ச்சிக்காக உழைக்கும், கட்சிக்காகவே தன் ஆயுளை அர்பணிச்ச ஒரு அரசியல் நிபுணருக்காக கொடுப்பது சால சிறப்புடையது...


      இங்கு கட்டுரையை பார்க்கும் போதே சிரிப்பு பொத்துகிட்டே வ்ந்திடுது....,,, வந்த காகம் இருந்த காகத்த விரசிச்சாம் .....என்ற கததான் ஞாபகம் வருது..!! இன்று வந்தவன் , சுய நலத்துக்காக வந்தவனுகள் எல்லாம் அரசியல் பேசவும் , மலையை பார்த்துக்கு குரைக்கவும் தொடங்கிவிட்டார்கள்.

      Delete
    2. ஆஹா அற்புதம் உங்கள் கருத்து. ஆவண காப்பாளரை செயளாலர் ஆக்கியது யாருடைய முட்டாள்தனம்? தேசியப்பட்டியல் பா உ ஆவதற்கு ஹஸனலிக்கு இருக்கும் தகுதிகளை கொஞ்சம் பட்டியலிடுங்கள் சகோதரரே. ஹஸனலி போன்ற இயக்க மற்ற, உறங்கு நிலை அரசியல் வாதியாக இருப்பது தானோ அவரின் தேசியப் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான தகுதியோ? ஏற்கனவே பைசால் காசிம் பாஉ ஆகவும் பிரதி அமைச்சராகவும் இருக்கும் போது நிந்தவூருக்கு ஏன் இன்னொரு பாஉ? அட்டாளைச்சேனையை அரசியல் அநாதையாக வைத்திருப்பது தான் "தலைமையின் சாணக்கியமான முடிவே? கப்ருக்குள்ள போற வயதிலும் பதவி ஆசை அடங்க வில்லை சிலருக்கு. அறிவை வாடகைக்கு விட்டுவிட்டு அரசியல் ஞானிகள் சிலர்.

      இனியும் எம் சமூகம் உணராவிட்டால்
      அழியட்டும் நமது கட்சி
      அழியட்டும் நமது சமுதாயாம்
      அழியட்டும் எமது தலைமைகள்

      Delete
    3. என்னது முழுத் தகுதி உடையவரா?
      என்னது அரசியல் நிபுணரா?
      என்னது கட்சிக்காக ஆயுளை அற்பணித்தாரா? அஷ்தஹ்பிருல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு எவனுக்காவும் எதற்காகவும் ஆயுளை அர்பணிபது ஆகுமானதல்ல.

      உங்களுக்கு நிற்பாட்ட முடியாத அளவுக்கு சிரிப்பு வர வேண்டும் இல்லா விட்டால் மருத்துவம் பிழையிகிவிடும் சகோதரர் maheez za

      Delete
  4. இந்தக் கட்டுரையால் சமூகத்துக்கு என்ன லாபம்.
    கட்டுரையாலரே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
    விசாரணை நாளில் கணக்கு சொல்ல வேண்டி வரும்

    ReplyDelete
  5. இதற்குரிய பலாபலனை திருவாளர்கள் இருவரும் எதிர்காலத்தில் நிச்சயம் எதிர் கொள்ள நேரிடும். ஏனெனில் குட்டகுட்ட படுபவனும் முட்டாள் ! அவ்வாறே குட்டுபவனும் முட்டாள் ! அத்துடன் செயலாளராக இருப்பதற்கு எம்.பி. பதிவிதான் வேண்டுமென்றால் இவரிடத்திலிருந்து செயலாளர் பதவியையாவது பறித்திருக்க வேண்டும் ?

    ReplyDelete
  6. றாசி , ஹக்கீம் எப்போதாவது சொன்னாரா தவத்துக்கு சுகாதார அமைச்சு தருவேன் என்று ? அவ்வாறு ஹக்கீம் எங்கும் சொல்லவில்லை அவர் aristrottil போன்று சொன்னார் Akp க்கு அதிகாரம் தருவேன் என்றார் . அது தேர்தல் முடிந்த கையோடு அந்த வாக்குறுதி நிறைவேற்றப் பட்டுவிட்டது . எவ்வாறென்றால் அதா உல்லா தோற்கடிக்கப்பட்டவுடன் தவத்திடம் அதிகாரம் ஒப்படைக்கப்ப்க்ட்டுவிட்டது .றாசி சொல்வது போன்று ஹக்கீம் அவர்கள் தவம் எனும் நோய்க்கு மருந்து கட்டி இருக்கின்றார் ஏனெனில் Akp அரசியல்வாதிகளை SLMC ஒரு போதும் நம்புவதில்லை ஏனெனில் உங்களுடைய பெரியப்பா சேகு இஸ்ஸதீன் அவர்கள் அஷ்ரப் அவர்களுக்கு கட்டுப்படவில்லை , அதனை தொடர்ந்து வந்த அத உல்லா அவர்களும் ஹக்கீம் அவர்களுக்கு கட்டுப்படாமல் அரசியல் செய்தார் அதனால் தான் SLMC தவத்தையும் நம்பவில்லை !!!

    ReplyDelete
  7. ஹக்கீம் அவர்கள் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்குவதற்கு முன் ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கி இருந்தமையை கட்டுரையாளர் மறந்து விட்டார் போலும் , இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இந்தக் கட்சியை காட்டிக் கொடுக்காத ஒருத்தர் என்றால் செயலாளர் ஹசன் அலி தான் என்றால் மிகையாகாது . ஹசன் அலிக்கு ஏன் வழங்கக் கூடாது என்பதற்கு காரணம் கூற முடியுமா ?

    ReplyDelete
  8. பிரதேச வாதம் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள் அருமையான ஆக்கம்

    ReplyDelete
  9. எந்தவிதத்தில் வாக்குதவரவிடப்படது என்பதை கொடுத்தவரும் பெருபவர்கலும் இரன்டுக்கும் நடுநிலையான அல்லாஹ்வும் நன்கு அரிவான் ஆனால் இடையிலுல்ல நாம் இந்தகட்டுரையைப்படித்துவிட்டு கூலிகொடுப்பவன்போல் முடிவுசொல்வதற்கு எந்தஅருகதையும்கிடையாது இதனால் வீன்பாவங்கள்சுமப்போர்கூட்டத்தோடுதான் சேரவேன்டும் என்பதை மறந்துவிடாதீர்கள் கருத்துக்கூரும் சகோதரர்கள்

    ReplyDelete

Powered by Blogger.