Header Ads



சமுதாய மாற்றத்திக்கான உலமாக்களின் வகிபாகம் - எழுச்சி மாநாடு

குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா மற்றும் இம்மாவட்டத்திலுள்ள 24 பிராந்திய கிளை அமைப்புக்களும் இணைந்து நடத்தும் சமுதாய மாற்றத்திக்கான உலமாக்களின் வகிபாகம் என்ற தொனிப் பொருளில் மாபெரும் எழுச்சி மாநாடு 31-10-2015 குருநாகல் தெலியாகொன்ன ரோயல் மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் பி. ப. 4. 00 மணி வரை நடைபெறவுள்ளதாக குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் சமூக சேவை மற்றும் பிரச்சாரப் பணிக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் கபூரி ரியாதி தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ. சுஐப் தீனி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் அப்துல் காலிக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் விசேட வளவாளர்களாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதித் தலைவரும் பேருவலை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பிரதி அதிபருமான அஷ்;ஷெய்க் ஏ, சீ, அகார் முஹமட், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் கபூரி மதனி, குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் சமூக சேவை மற்றும் பிரச்சாரப் பணிக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் கபூரி ரியாதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதில் விசேட அம்சமாக நீண்ட காலமாக குருநாகல் மாவட்டத்தில் பங்காற்றிய மூத்த உலமாக்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வில் சுமார் 750 உலமாக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக என்று அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. உலமாக்களின் பங்களிப்பு முஸ்லிம் சமூகத்திற்க்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.இவர்களின் பேச்சி உண்மையாகவே பல மக்களை நேர்வழியின் பால் இழுத்துச்சென்றிருக்கிகின்றன.அல்ஹம்துலில்லாஹ்.

    ஆனாலும் இவர்களின் சிலரின் தூர நோக்கு அற்ற கடும்போக்கு சிந்தனையும், சம கால நிகழ்வுகளை பகுத்தறிந்து கையாளும் ஆற்ற அற்ற உலமாக்களும் நம் மத்தியில் ஒரு பெரும் தலை இடியாகவே நாம் பார்க்கிறோம்.

    இதை போக்க ஜம்மியத்தில் உலமா வின் கீழ் சரியாக பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டு பன்படுத்தப்பட்ட உலமாக்களை சமூகத்திற்கு அறிமுகம் செய்தால் ,ஆங்காங்கே முஸ்லிம்கள் இயக்கம் என்ற பெயரில் இஸ்லாமிய சமூகம் துண்டாடப்பதுவதையும் ,வீணான சண்டை சச்சரவுகளில் இருந்து பாதுகாப்பதுடன்,விட்டுக்கொடுப்பு,சாஹிப்பு தன்மை ,மற்ற இயக்க நண்பர்களை சகோதரகளாக பார்க்கும் மனப்பான்மை உருவாக ஏதுவாக இருக்கும்

    ReplyDelete
  2. mashaallah thats tru mr.mihraj

    ReplyDelete
  3. Pls guide Ulamas on how to use the Mimber in social change.

    ReplyDelete

Powered by Blogger.