சட்டம்தான் நாட்டை ஆளுமே தவிர, பிக்குகள் அல்ல - பொதுபல சேனாவுக்கு பொலிஸ் எச்சரிக்கை
எந்த நிகழ்ச்சிக்கும் உள்நுழைந்து தடை செய்யும் அதிகாரம் எந்தவொரு அமைப்பினருக்கும் கிடையாது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும், அது மத குருமாறாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். சட்டம் தான் நாட்டை ஆளுமே தவிர பிக்குகள் அல்ல என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேகாலை மாவட்ட SP அவர்களினால் பொது பல சேனாவின் பிக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
கடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம நகரில் மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உள்ளே நுழைந்து நிகழ்ச்சியில் பிரச்சினை உண்டாக்கிய பொது பல சேனா இனவாத அமைப்பின் பிக்குகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகம் கடந்த 07.09.2015 அன்று பொலிஸ் தலைமையகத்தில் ஒரு முறைப்பாட்டை பதிவு செய்தது.
குறித்த முறைப்பாடு பற்றிய விசாரனை நேற்றைய தினம் (13.10.2015) கேகாலை மாவட்ட SP அலுவலகத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த விசாரனையில் தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகமும், பொது பல சேனா சார்பில் 03 பிக்குமார்களும் பங்கு கொண்டார்கள்.
கேகாலை மாவட்ட SP முன்னெடுத்த குறித்த விசாரனையில் “ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய நிகழ்ச்சிக்குள் BBS பிக்குகள் நுழைந்து பிரச்சினை செய்தமை பாரிய குற்றம் என்றும் அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எந்த நிகழ்ச்சிக்கும் உள் நுழைந்து தடை செய்யும் அதிகாரம் எந்தவொரு அமைப்பினருக்கும் கிடையாது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும், அது மத குருமாறாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். சட்டம் தான் நாட்டை ஆளுமே தவிர பிக்குகள் அல்ல என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது பல சேனாவின் பிக்குகளுக்கு கேகாலை மாவட்ட SP எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன், குறித்த நிகழ்ச்சியில் பிரச்சினை செய்த பொது பல சேனாவினருக்கு எதிராக புகார் அளிக்க வந்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளின் புகாரை பதிவு செய்ய மறுத்த ஹெம்மாதகம பொலீஸ் பொருப்பதிகாரியை கண்டித்த SP அவர்கள். தற்போது தவ்ஹீத் ஜமாத் புகார் அளிக்கும் பட்சத்தில் ஹெம்மாதகம பொலீஸ் பொருப்பதிகாரிக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக BBS சார்பில் அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும், குறித்த புகார் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்ற காரனத்தினால் அதனை இப்போதே வாபஸ் பெற வேண்டும் என்றும் SP அவர்கள் கூறியதற்கு இணங்க BBS சார்பில் கலந்து கொண்ட மத குருமார்களினால் குறித்த புகார் மீளப் பெறப்பட்டது.
அத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிங்கள மொழியில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி ஹெம்மாதகம நகரில் மீண்டும் நடத்துவதாக இருந்தால் அதற்கு பொலிஸின் முழுமையான ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும், இதற்குப் பின் பொது பல சேனாவோ அல்லது வேறு எந்த அமைப்பினருமோ இது போன்ற அநாகரீகமான காரியங்களில் ஈடுபடும் பட்சத்தில் சட்டப்படி அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SP யினால் குறித்த பிக்குமார்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இனிய மார்க்கம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் இன்னும் வீரியமாக தொடர்ந்து நடத்தப்படும் என்பதை ஜமாத் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
#ஊடகப் பிரிவு - SLTJ

அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
ReplyDeleteAlhamdulillah. The Truth never die.this is one of example. ALLAHU AKBAR.
ReplyDeleteAlhamthulillah
ReplyDeleteyes no one has right to interrupt any thing other than law enforcement authorities. But one thing should be in the mind of every one that no one should try to impose our policies on other people. yes we calling it is "Iniya Islam." but whole the world is laughing at Islam and the Muslims Because they want to kill each other on the basis of deference In Islam and trying to impose on others what? Because of this difference blood runnig like a rivers in Iraq and Syria. Is it iniya Islam is killing shia, demolishing historical site, insult other religion and it's leaders, Islamic Saint, Now this two Group is Creating a big problem in whole world now want it in srilanka too within and with other religion. we know big money is flowing from some countries. do not create dangerous situation for the sake of money. as far as am concern their is no difference betweem BBS and SLTJ. Both are dancing for Norway money and Saudi Money.
ReplyDeleteI agree with Imthiyas SLTJ, run by a few immature guys try to create social unrest in Sri Lanka. It was behind the Tharga Town scene. If they are not banned they will create problems for Sri Lankan Muslims like what PJ does in India.
ReplyDeleteAllahu Akbar எங்க எங்கட மற்ற சகேதர்ர்களைக் கானோம்
ReplyDeleteதலையை மிதித்து அடக்க வேண்யதை வாலில் மிதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லையே..
ReplyDeleteஇன்று சொல்வதை அப்பொழுதே சொல்லி அடக்கி வைத்திருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.
SP இன் பெயர் குறிப்பிடவில்லையே?
ReplyDelete