ஆப்கானிஸ்தான் பூகம்பம் - இலங்கை அனுதாபம்
ஆப்கானிஸ்தான் பூகம்பத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வாழ் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்றைய தினம் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தின் தாக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டிருந்தன.
அத்துடன், இந்த பூகம்பத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்திருந்ததுடன், 2000திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment