ஸ்மார் போனை அதிகமாக தடவினால் கண்ணுக்கும், உடலுக்கும் ஆபத்து
இமைப்பொழுதும் விலகாத நிலை காதலில் தான் சாத்தியம். அது ஸ்மார்ட்போனுக்கும் பொருந்துகிறது. ஸ்மார்ட் திரையில் மகிழ்ந்து விளையாடுகின்றன விழிகள். நுனிவிரல் தொடுகையில் ஆயிரம் இன்பங்கள். இமேஜ், மெசேஜ், வாய்ஸ், வீடியோ என உறவாடும் நேரங்கள் சுகமானவை. அதற்காக அதிகமாக தடவினால் கண்கள் மட்டுமல்ல, நம்ம உடலுக்கும் ஆபத்து தான்.
ஆனால் தொடர்ந்து ஸ்மார்ட் திரையில் கண்களை குவித்து விளையாடுவதால் உடலுக்கு எக்கச்சக்க பிரச்னைகள் ஏற்படுகிறதென்றால் அவ்வப்போது பிரியா விடை கொடுத்து தான் ஆக வேண்டும். அதே ஸ்மார்ட்போனை உங்கள் நலனை விரும்பும் தோழியாக மாற்றிவிட்டால் போதும் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
கண்களை இடைவெளியின்றி வேலை வாங்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு கண் மற்றும் மூளை பகுதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் தகவல் பரிமாற்றத்தின் போது கண் சிமிட்டும் விகிதம் குறைகிறது.
கண்ணை 10 முதல் 15 வினாடிகளுக்கு ஒரு முறை சிமிட்ட வேண்டும். ஸ்மார்ட்போன் திரைக்கும், கண்களுக்கும் 20 முதல் 28 அங்குலம் வரை இடைவெளி அவசியம். தகவல் பரிமாற்றத்தின் போது அதிகளவு கவனம் செலுத்துவதால் கண் மற்றும் மூளைக்கு அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 2 நிமிடம் இடைவெளி எடுத்து வேறு பணிகளில் ரிலாக்ஸ் செய்யலாம்.
காலை மற்றும் இரவு நேரத்துக்கு ஏற்ப மானிட்டரின் ஒளியை குறைத்து கொள்ளலாம். இதனால் வெப்பம் குறைந்து கண் சோர்வு தடுக்கப்படும். அன்றாட வேலைகளையே கலவையாக செய்து மன உளைச்சலில் இருந்து விடுபடலாம். இரவில் மொபைல் டேட்டவை ஆப் செய்து விடுவது கண்களுக்கு நல்லது.
Post a Comment