"சவூதி அரேபியா ஹஜ் புனிதப் பயணத்தை தொடர்ந்து நடத்தும்"
மக்கா அருகே மதீனாவில், ஹஜ் புனித யாத்திரையின்போது கடந்த மாதம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஹஜ் யாத்திரையை பாரம்பரியமாக சவூதி ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், மக்கா, மதீனாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இரு மசூதிகளின் பாதுகாவலர் என்று சவூதி மன்னர் அறியப்படுகிறார்.
இந்த நிலையில், நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியானதையடுத்து, சவூதி அரசின் ஹஜ் ஏற்பாடுகள் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
சவூதி அரசு வெளியிட்ட பலி எண்ணிக்கையைவிட மிக அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பல நாடுகள் கூறின.
பல்வேறு நாடுகளின் ஹஜ் குழு வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில், ஹஜ் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,400-க்கும் அதிகம் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கு முன்னரும் ஹஜ் யாத்திரையின்போது நெரிசல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், புனித யாத்திரை ஏற்பாடுகளை முஸ்லிம் நாடுகள் இணைந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
கடந்த மாத நெரிசலில் அதிக அளவில் உயிரிழந்தவர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள். சவூதியின் ஏற்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஈரான் அரசு, ஹஜ் பயணத்தை தன்னிச்சையான சர்வேதச அமைப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
இந்த நிலையில், சவூதி இளவரசர் துர்க்கி அல்-ஃபைஸல் அந்தக் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்தார்.
அபுதாபியில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
மக்காவில் உள்ளவர்கள்தான் மக்காவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களது உரிமையை மறுக்க முடியாது.
ஹஜ் யாத்திரையை சவூதியே தொடர்ந்து நடத்தும். இது எங்கள் நாட்டின் உரிமை மட்டுமல்ல; யாத்திரை ஏற்பாடுகளைச் செய்வது சவூதி அரேபியாவின் இறையாண்மை சார்ந்த விவகாரமாகும்.
மக்கா, மதீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த இரு மசூதிகளின் பாதுகாவலர் என்று சவூதி மன்னர் அறியப்படுகிறார். அந்தத் தனித்துவத்தையும் உரிமையையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று சவூதி இளவரசர் துர்க்கி அல்-ஃபைஸல் கூறினார்.
Allah is the custudian not Saudi King. These people are similar to Hajjaj Ibnu Yusuf.
ReplyDeleteசவூதியின் இளவரசர் துர்க்கி அல்-பைஸல் தெரிவிக்கும் கருத்தை வெளியிட்டு யாருடைய போடோவை இங்கு பிரசுரம் செய்திருக்கின்றீர்கள். இங்குள்ள போ டோ காலம் சென்று பலமாதங்கள் கழிந்துவிட்ட சவூதியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரின் போடோவை பிரசுரம் செய்திருக்கின்றீர்கள். ஒன்றுக்கொன்று முரணாக பிரசுரிப்பதைத்தவிர்ந்து கொள்ள தீர ஆய்வு செய்து துல்லியமாக அவதானித்து பிரசுரம் செய்வது உங்கள் இணையத்தளத்தின் தரத்தைப் பேண உதவும்
ReplyDeleteIRAN and SHIA has violated by inciting killing of Hajji in 1000s in history of Islam many time.
ReplyDeletethey have no right to blame KSA, Infact their pilgrim do not follow the commandments of Muhammed(sal) way of Hajj... Rather they have their own style and follow many time CALLING not Allah But HUSSAIN... which is considered SHIRK..
If IRAN is given any hand in HAJJ issue.... That will open the door for SHIRK worshipping in MAKKA, for which Allah's messenger forgth 23 years.
Let All Muslim countries oppose the IRAN fake stand in this issue.
May Allah Make Makka and Madina pure from SHIR and AHLUL SHIRK
ஈரானின் அடாவடித்தனமே மக்கள் நெரிசலில் மரணித்ததற்கான பிரதான காரணம். அதை மூடி மறைத்துவிட்டு குறித்த சில இஸ்லாமிய நாடுகள் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை இணைந்து நடாத்த வேண்டும் எனக் கோரி ஷீஆயிசத்தைக் கொண்டு வர முணையும் நரி விளையாட்டே இது. இதனை ஸவுதி அரசாங்கமே இன்னும் பல திருத்தங்களுடன் மேற்கொள்ள வேண்டும்.
ReplyDelete