இஸ்லாமிய எதிர்ப்பாளரை, கட்டித்தழுவிய முஸ்லிம் சகோதரி - பொலிஸார் அதிர்ச்சி (படங்கள்)
அமெரிக்காவின் மிச்சிக்கன் பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பு பதாகைகளுடன் தனித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்ணை எதிர்பார்க்காத வகையில் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் கட்டுத் தழுவியதை அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் முஸ்லிம்களுடன் நட்புப் பாராட்டியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய வன்முறைக்கு எதிராக கடந்த ஞாயிறன்று பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ஒன்றுதிரள திட்டமிட்டபோதும் ஒரு பெண் மாத்திரமே எதிர்ப்பு பதாகைகளுடன் எஞ்சியிருந்தார்.
அப்போதே பர்தா அணிந்த முஸ்லிம் பெண், ஏனைய ஆதரவாளர்களுடன் அங்கு வந்து குறித்த பெண்ணை கட்டித் தழுவிக்கொண்டார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட விவாதத்திற்கு பின் அவர் பள்ளிவாசலுக்குள் வர விருப்பம் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பெண் பள்ளிவாசலுக்குள் செல்வதை பார்த்து அங்கு காவலுக்கு வந்த பொலிஸாரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். கரகோசத்துடன் பள்ளிவாசலுக்கு வரவழைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு காலை விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.
எனது கணவன் மற்றும் போதகர் எதிர்ப்பு வெளியிட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இங்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கும் அந்த பெண்,
தான் இப்படி ஒரு அனுபவத்தை சந்திப்பேன் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நட்புக் கொண்ட முஸ்லிம் பெண்
மாஷா அல்லாஹ் இது இஸ்லாமிய பன்பாடு
ReplyDeleteallahu akbar good sister
ReplyDeleteதனிப்பட்ட விதத்தில் இது பாராட்டத்தக்க நடத்தை. எஞ்சியிருந்த அந்தப் பெண்மணி எதிர்ப்பின் தாற்பரியம் புரியாமல் கணவனுக்காக வந்து நின்றவர் என்பதால் அவரைக்கட்டித்தழுவியதும் சுமுகமாக முடிந்திருக்கின்றது.
ReplyDeleteஆனால், அவர்கள் எதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்களோ அந்தக்கோஷங்களுக்குரிய தார்மீக நியாயம் அப்படியே உள்ளதே. அதற்கு யார் பதிலளிப்பது..?