"முஸ்லீம்களை அச்சுறுத்த, எவருக்கும் இடமளிக்க முடியாது"
முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லீம் மக்கள் அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறவருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பே௱ன்றவர்கள் ஊடகங்களை பயன்படுத்தி அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில் மேற்கண்டவாறு தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மேற்படி மக்கள் 1990 ஆண்டு நீண்ட இடப்பெயர்வின் பின்னர் தங்களது சொந்த இடத்தில் தற்போது குடியேறியுள்ளனர்.இவர்கள் மீள குடியேறும் போது பல சவால்களை அய்கு எதிர்நோக்கியுள்ளனர்.
ஆனால் அரசியல்வாதிகள் சிலரது செயப்பாடுகள் தமிழ் முஸ்லிம் மக்களிற்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்துகின்ற மாற்று பயங்கரவாத செயப்பாடாக உள்ளது.
நான் முல்லைத்தீவு மண்ணில் பிறந்தவன்.மக்கள் பிரதி நிதி என்ற வகையில் அம்மக்கள் தங்கள் சொந்த இடத்திலே தான் குடியேறுகின்றனர் என்பேன்.இதற்காக அவர்கள் மிகவும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
முறிப்பு ,நாகஞ்சோலை ,கொத்தியா கும்பம் போன்ற பகுதி 1982 ஆண்டு ,1984 ஆண்டு அரசினால் போமிட் வழங்கப்பட்டு அப்பகுதியில் முஸ்லிம் மக்களிற்கு வழங்கப்பட்டது.ஆனால் சில ஊடகங்கள் வட மாகாண சபை சக உறுப்பினர் து.ரவிகரனது கருத்தினை மையப்படுத்தி குடியேறிய அப்பாவி மக்களுக்கு தேவையற்ற பட்டங்களை வழங்கி அச்சுறுத்தி வெளியெற்ற முனைகின்றன.
சில ஊடகங்கள் காடுகளை அழிக்கின்றனர் என தெரிவித்திருப்பது அவர்களது அறியாமையாகும்.பல வருடகாலமாக ஒரு இடம் பராமரிப்பு இன்றி கிடந்தால் அவ்விடயம் எப்படி இருக்கும் என்பது யாவரும் அறிவர்.குடியேறிய அப்பகுதி மக்கள் தங்களது சொந்த காணிகளில் மண்டியிருந்த பற்றைக்காடுகளையே அகற்றினர்.பாரிய மரங்களை அழித்து காடுகளை அவர்கள் அழிக்கவில்லை.
இதனுடன் மற்றுமொரு குற்றச்சாட்டும் உள்ளது.இக்குடியேற்றத்தின் பின்னால் எமது தேசிய தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.இதனை முற்றாக நான் மறுக்கின்றேன்.
அம்மக்களிற்கு கிடைக்கபபெற்ற ஸகாத்(ஏழைகளின் வரிப்பணம்) பணத்திலே தங்களது காணிகளை துப்பரவு செய்கின்றனர்.
இதனை ஏன் தடுக்க முற்படுகின்றனர் என கேள்வி கேட்க விரும்புகின்றேன்.ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க முன்வரவேண்டும்.தமிழ் முஸ்லீம் இன நல்லுறவை சீர்குலைக்க முற்பட கூடாது.2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் 1000 குடும்பங்களாக இருந்த குடும்பங்கள் 4000 குடும்பங்களாக பெருகியுள்ளது.ஆனால் அவர்கள் தேவையற்ற காணிகளை அழிக்க முற்படவில்லை.தங்களது சொந்த காணிகளையே பொறுப்பெடுத்து சுத்தம் செய்கின்றனர்.
இதனை பலரும் முள்ளியவளை என தெரிவித்து முறிப்பு பிரதேசத்தை மறைக்க முற்படுவது வேதனை தருகின்றது.ஊடகங்கள் சிலவும் இதனை திரிவு படுத்தி யுள்ளன.இதனை அவர்கள் கைவிட முன்வர வேண்டும்.அம்மக்களை அரவணைக்க வேண்டும்.என தனது கருத்தில் மேலும் தெரிவித்தார்.
Why the current government is silent on this issue.?
ReplyDelete