ஜேர்மன் ஜனாதிபதி, ஒரு பைத்தியக்காரி - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்
ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு கதவுகளை திறந்து விட்டுள்ள அந்நாட்டு சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் ஒரு பைத்தியக்காரர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் குடியேற வரும் வெளிநாட்டினர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்கள் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
கட்டுப்பாடின்றி புலம்பெயர்ந்தவர்களை அனுமதித்து வரும் சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் மீது உள்நாட்டு அரசியல் தலைவர்கள் உட்பட சர்வதேச நாட்டு தலைவர்களும் கண்டனம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் அந்நாட்டு குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது, அகதிகள் தொடர்பாக ஜேர்மனி சான்சலர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மனியின் சான்சலர் ஒரு மிகச் சிறந்த அறிவாளி என நினைத்து வந்தேன். ஆனால், புலம்பெயர்ந்தவர்களுக்கு, குறிப்பாக சிரியா அகதிகளுக்கு தன்னுடைய நாட்டின் கதவுகளை திறந்து வைத்திருப்பதன் மூலம் அவர் ஒரு பைத்தியக்காரர் என நிரூபித்துவிட்டார் என தடாலடியாக பதில் கூறியுள்ளார்.
சிரியா நாட்டிலிருந்து வரும் அகதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளும் நுழைய மிக அதிக வாய்ப்புள்ளது. ஜேர்மனியில் குடியேறிய பிறகு அவர்கள் தொடர் கலவரங்களில் ஈடுபட்டால், அதனை எதிர்க்கொள்ள சான்சலர் தயாரா என டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிரியா அகதிகளின் பிரச்சனைகளை தீர்ப்பது ஐரோப்பிய நாடுகளின் கடமை மட்டுமில்லை. இதற்கு நிரந்திர தீர்வு காண மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் தான் முன்வர வேண்டும் என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்காவில் உள்ள பாதிக்கும் மேலான அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என கூறியதால், அவர் அகதிகளுக்கு எதிரானவர் என்ற நிலைப்பாடு அந்நாட்டு மக்களிடைய நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இனஷாஅல்லாஹ் இவர் தோற்றுப்போவது உறுதியாகிவிட்டது
ReplyDeleteஇவனின் தோலுஸி இவன் முகத்திலே பதியப் பட்டுல்லது. அல்லாஹ் மிகவும் சிறந்த சதியாலன்.
ReplyDelete