Header Ads



வடக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் - அநுரகுமார, முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றம்

-அஸ்ரப் ஏ சமத்-

பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு   மறுக்கப்படும் உரிமைகளும்  சவால்களும் என்ற தலைப்பில் நுால் ஒன்று (28) கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது,  

நுாலின் முதற் பிரதியை இவ் வைபத்திற்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜே.வி. பி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பிணா் அநுர குமார திசாநாயக்க முசலி முன்னாள் பிரதேச சபைத் தலைவா் எஹியாவிடம் கையளித்தாா்.  நுால் விமா்சனத்தை கட்டக் கலைஞா் எஹ்யா றிசாவும், பேராதெனியா பல்கலைக்ககழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியை சிவமோகன் சிவஜோதி உரைநிகழ்த்தினாா்.  சுங்க அதிகாரி லுக்மான் உரையாற்றினாா். 

இங்கு லுக்மாணினால் 8 உறுதி மொழி வாசிக்கப்பட்டு சபைக்கு வந்திருந்தோா்களினால் நிறைவேற்றப்பட்டது.

(1) 2012 ஒக்டோபா்  10ஆம் திகதி வர்த்தமாணி அறிவித்தலை ரத்துச் செய்யதல், 

(2) 2009ஆண்டு காடுகளாக சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  எல்லைகளை மீள அமைத்தல் 

(3) எம்மில் காணியுரிமைக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் வைத்துள்ளவா்களுக்கு  சேனைப் பயிா்ச் செய்கை மற்றும் வேளான்மைக் கான நிலங்களைத்  திருப்பித் தருதல். 

(4) இப்போது கடற்படையின் விவசாய செயற்திட்டத்தின் கீழ் பயிா் செய்யப்படும் எமது நிலங்களை உரிமையாளா்களிடம் கையளித்தல், 

(5) தற்போது  காடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஏனைய காணிகளில் நாம் பாரம்பரியமாகச்  செய்து வந்த சேனைப் பயிா்ச்செய்கை பண்னை வளா்ப்பு என்பவற்றுக்கு எமக்கு அனுமதி அளித்தல்.

(6) வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்தை முசலி தெற்கு மக்களாகிய எமது வரலாற்று முக்கியத்துவமிக்க கிராமங்களான முள்ளிக்குளம் தமிழ் மரிச்சுக்கட்டி  முஸ்லீம் என்பவற்றில் இருந்து அகற்றி வேறு இடத்துக்குச் கொண்டு செல்லுதல்  போன்ற பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது. 

இங்கு உரையாற்றிய அநுர குமார திசாநயாக்க 

இந்த அரசாங்கம் வடக்கில் இடம்பெயா்ந்த சகல மக்களையும் மீளக்குடியேற்ற ஒரு திடகாத்திரமானதொரு பொறிமுறையைச் செய்தல் வேண்டும். யுத்தம் முடிவடைந்தால் அங்கு ரானுவத்தினரோ, கடற்படையினரோ பாதுகாப்பு வலயம் என்ற போா்வையில் அப்பாவி மக்களின் நிஜ பூமிகளை பிடித்துக் கொண்டிருக்காமல் அவைகள்  மீளக் கையளிக்கப்படல் வேண்டும். இப் பூமிகளை அப் பிரதேச அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவாறு திட்டமிட்டு அதனை வெளிநாட்டவா்களுக்கு உல்லாச ஹோட்டல்கள் கட்டுவதற்கு பயண்படுத்துகின்றனா். யுத்தம் முடிவடைந்ததன் பின்னா் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே பாதுகாப்பு படையினா் ஊடாக காணிகளை அபகரித்தாா். 

பேராசிரியா் ஹஸ்புல்லாவின் நுாலின் சொல்லியிருக்கும் தகவல்களுக்கு ஏற்ப யுத்தமுடிவடைந்த நிலையில் அம்மக்கள் மீளக் குடியமாத்தப்படல் வேண்டும் என்ற  நிலைக்கு எமது கட்சி ஜே.வி.பி பூரண ஆதரவை வேண்டுகின்றது. என அநுர குமார திசாநாயக்க தெரிவித்தாா்.




2 comments:

  1. We urge the government of Srilanka to appoint a Presidential Commission to find durable solutions to this protracted displaced.
    https://www.change.org/p/president-of-srilanka-appoint-a-presidential-commission-to-investigate-the-forcible-eviction-of-northern-muslims

    ReplyDelete

Powered by Blogger.