சிறுமியை கடத்திய ராஜித குடும்பத்தினர், குற்றச்சாட்டில் இருந்து விடுதலை
18 வயதை எட்டாத சிறுமியை கடத்திச் சென்று தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது மனைவி சுஜாதா சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய இன்று அறிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் கொழும்பு முல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பபெற்றுள்ளதால், அந்த வழக்கை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் நடத்துவதில் பயனில்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
மனுதார்கள் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெற்றுள்ளதால், வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் சந்தேக நபர்களை விடுதலை செய்வதாக நீதவான் கூறியுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி இரண்டு வாரங்களில் தான் உரிய வயததை எட்டிவிடுவாள் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் பெற்றோருடன் வாழ விரும்பவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

Post a Comment