Header Ads



உடைகளிலும் ரசாயனங்கள், புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து

துணிகளைத் தயாரிக்கும்போது, பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கும் நச்சுக்கள் நாம் வாங்கும் உடைகளில் தேங்கியிருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், பிரபல நிறுவனங்களின் உடைகளிலும் நூறுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த உடைகளின் மீது சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் ரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இதில், முக்கியமாக அரோமேட்டிக் அமைன்ஸ் மற்றும் கினோலோன்ஸ் என்ற இரண்டு ரசாயனங்கள் பாலியஸ்டர் உடைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ரசாயனங்கள் ‘டெர்மடிடிஸ்’ என்கிற அலர்ஜி தொடங்கி இன்னும் மோசமான பாதிப்பை உடல்நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இவை புற்றுநோயை உருவாக்குவதாகவோ, உடலின் ஜீன்கள் மற்றும் வளர்சிதையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவோ அமையலாம் எனத் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.