Header Ads



அயோக்­கி­ய தேசப்­பற்றாளர்கள், ஆட்­சியை கைப்­பற்ற முயற்­சி - ஹக்கீம்

"அயோக்­கி­யர்­களின் இறுதிச் தஞ்சம் தேசப்­பற்று" அதே­போன்­ற­தொரு நிலை இன்று நாட்டில் தலை­தூக்­கி­யுள்­ளது. இவ்­வா­றா­ன­வர்­களே சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி ஆட்­சியை கைப்­பற்ற முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்­றனர் எனக் குற்­றம்­சாட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்­மையை கண்­ட­றிந்து இனங்­க­ளி­டையே மீளி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மென்­பதே ஐ.நா. அறிக்­கையின் எதிர்­பார்ப்­பாகும் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான ஐ.நா. அறிக்கை மற்றும் ஜெனிவா தீர்­மானம் தொடர்­பான இரண்டாம் நாள் விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 

சர்­வ­தே­சத்­திற்கு நாம் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றா­ததன் கார­ண­மா­கவே சர்­வ­தே­சத்தில் எமக்கு அவ­மா­ன­மான ஒரு நிலை தோன்­றி­யது. இவ்­வா­றா­னதோர் நிலை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் புதிய ஆட்சி ஏற்­பட்­டது. சர்­வ­தேசம் புதிய ஆட்­சியின் நல்­லாட்­சியை புரிந்து கொண்­டது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா.வில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்த போதும் அது செப்­டெம்பர் வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இன்று புதிய ஆட்சி சர்­வ­தேச விசா­ர­ணை­யி­லி­ருந்தும் சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ ர­ணை­யி­லி­ருந்தும் நாட்டை பாது­காத்து உள்­ளக விசா­ர­ணைக்­கான பாதையை திறந்­துள்­ளது.

இது எமது அரசின் வெளி­நாட்டு கொள்­கைக்கு கிடைத்த வெற்­றி­யாகும். ஆனால் தேசப்­பற்­றா­ளர்கள் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்வோர் எமது படை­யி­னரை நாம் பலி கொடுக்கப் போவ­தாக பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

அயோக்­கி­யர்கள் இறு­தி­யாக தஞ்­ச­ம­டையும் இடம் தேசப்­பற்று என ஒரு ஆங்­கிலக் கவிஞன் கூறி­யி­ருக்­கின்றார். அத­னைப்­போன்று நாட்­டுக்குள் தற்­போது தேசப்­பற்­றா­ளர்கள் தலை ­தூக்­கி­யுள்­ளனர். இவர்கள் இன­வா­தத்தைப் பரப்­பு­கின்­றனர். ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்ற ஜெனிவா ஐ.நா அறிக்கைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்த தேசப்பற்றாளர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினர். இவ்வாறு குழப்பத்தை ஏற் படுத்தி ஆட்சியை கைப்பற்ற இவர்கள் முயற் சிக்கின்றனர்.

5 comments:

  1. நீண்டகால இடைவெளிக்குப் பின்னால் சரியாக சிந்தித்து நாட்டு மக்களின் நலன்களின் பக்கம் கவனம் திருப்பப்பட்டுள்ளது நன்றிகள் பல கோடி.

    ReplyDelete
  2. Very good speech ans weldone

    ReplyDelete
  3. Rauf Hakeem, You cannot talk about the current Yahapalanaya which has gone to dog by appointing O/L passed Arjuna's Brother as a Chairman of Port Authority and appointing my3's brother as Telecom Chief with a monthly salary of LKR10million.

    ReplyDelete
    Replies
    1. I don't know about Arjuna's brother but I have seen reports about My3's brother. He has held many oositions in the government instituions on the past and he is qualified for that. So I don't see any issues with that.

      Delete
  4. We can criticise the present government about their mistakes ever. But we must understand the current situation clearly. The extremists are trying to take power in wrong way. The Dinesh, wimal, wasu and udaya are extremist who are danger for our country. That is why, SLMC leader has pointed out in his speech

    ReplyDelete

Powered by Blogger.