Header Ads



ஹொரவபொதானை றஷீதிய்யா அரபுக் கல்லூரியின், புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள்

அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவபொதானை பிரதேசத்தில் வறிய மாணவர்களின் மார்க்கக் கல்வியை மேம்படுத்தவும், அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா அடிப்படையில் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை உருவாக்கும் நோக்கிலும் சிறப்பாக இயங்கி வரும் முக்கரவெவ, றஷீதிய்யா அறபுக் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12 வயதிற்கு குறையாதவராக இருத்தல் வேண்டும்.
அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
தமிழ்மொழியில் பரிச்சயம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் முழுப்பெயர், வயது, கல்வித் தகைமை, விலாசம், தொடர்புகொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

குறிப்பு:

இங்கு மாணவர்கள் க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குத் தயார்படுத்தப்படுவதோடு, அஹதிய்யா பரீட்சை, தர்மாச்சாரிய பரீட்சை, அல்-ஆலிம் சான்றிதழ் பரீட்சை போன்றவற்றிற்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.

இங்கு தகவல் தொழிநுட்பக் கல்வி (IT) மற்றும் தொழிற்பயிற்சிக் கல்வி என்பனவும் அடுத்த வருடம் முதல் வழங்கப்படவுள்ளமை விஷேட அம்ஷமாகும்.

இங்கு ஷரீஆப் பிரிவில் கற்கும் மாணவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களாக பட்டம் பெறுவதற்கான பாடத்திட்டம் போதிக்கப்படும்.
மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்த அநாதை மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகும்.

விண்ணப்ப முடிவுத் திகதி - 2015.11.30

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
THE PRINCIPAL
RASHEEDHIYYA ARABIC COLLEGE.
MUKKARAWEWA,
HOROWPOTHANA - 50350

தொடர்புகளுக்கு:
T.P - 0252278372, 0774034284, 0774939888, 0779898098.
FAX - 0252278372, EMAIL - rasheedhiyya.ac@gmail.com

No comments

Powered by Blogger.