Header Ads



மாணவர்கள் மீது பொலிஸார் அராஜகம் (முழு வீடியோ) குவிகிறது கண்டனம், அறிக்கை கேட்கும் ரணில்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன் நேற்று மாணவர்கள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் மீது, பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கண்டனம் வௌியிட்டுள்ளது. 

இது குறித்து அக்கட்சி வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

நேற்று (29) தமது நியாயமான உரிமைகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலால் மாணவ, மாணவிகள் பலர் காயமடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதற்கான பொறுப்பை அரசாங்மே ஏற்க வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
வீடியோ


கணக்காளர் உயர் தேசிய டிப்ளோமா  பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று வியாழக்கிழமை (29)  மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, கலகம் அடக்கும் பொலிஸாரின் நடவடிக்கை குறித்தான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பணித்துள்ளார்.

2



3 comments:

  1. பொலிசார் செய்ததில் ஒரு தவறும் இல்லை. மக்களின் சாதாரண வாழ்க்கை பாதிக்கபப்டும் விதத்தில் மாணவர்கள் செயற்படுவதுதான் அராஜகம் ஆகும்.

    ReplyDelete
  2. மாணவர்களின் உரிமை மறுக்கப்படுவது மட்டும் நியாயமா.... சில ஆண்டுகளில் Degree வழங்க படுகிறது சில ஆண்டுகளில் Diploma ஆக மாற்றுவதும் யாருடைய தவறு இதுவரை காலமும் சரியான தீர்மானத்தினை உரிய அமைச்சு எடுக்காதது ஏன்........

    ReplyDelete
  3. போராட்டம் சரியான பாதையில் முன்னெடுக்கப்படல் வேண்டும். அடுத்தவர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    அத்துடன் பல்கலைக்கழக கல்வியின் பெரும் பகுதி பொது மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது என்பதை நினைவில் நிறுத்தி செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.