என்னுடைய சகோதரரை படுகொலை செய்த புலிகள், என்மீதும் தாக்குதல் நடத்தினர் - விக்ரமபாகு கருணாரத்ன
தான் விடுதலைப் புலி உறுப்பினர் அல்லவெனத் தெரிவித்துள்ள நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தமிழ் மக்களின் சாதாரண கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினரே எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் விடுதலைப் புலி உறுப்பினர் எனில் என்னை கைது செய்திருப்பார்கள். புலிகள் அமைப்பின் பெயரைச் சொன்னாலே கடந்த அரசாங்கம் மாத்திரமல்ல, இந்த அரசாங்கமும் என்னை ஒரு விநாடியேனும் விட்டுவைக்காது.
நான் புலி உறுப்பினர் அல்ல. புலிகள் என்மீது தாக்குதல் நடத்தினர். என்னுடைய சகோதரரை படுகொலை செய்தவர்கள் அவர்களே. எங்களது கட்சி காரியாலயத்தையும் புலிகள் தீக்கிரையாக்கினர்.
எங்களது கட்சியினூடாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் சாதாரணமானது என்ற விடயத்தை வலயுறுத்தி வருகின்றோம்.
புலிகளின் கோரிக்கைகளுக்கும் எங்களது வேண்டுகோளுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.
அப்படியாயின் இந்த நாட்டில் பல புலி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சம்பந்தன் மற்றும் மனோ கணேசன் எல்லோரும் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறமுடியுமா?
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியிருந்தால் என்னால் இன்று இவ்வாறு இருக்க முடியுமா என குறிப்பிட்டார்

A man with principle, you cannot compare with him any of current politicians in sri lanka.
ReplyDelete