Header Ads



புலிகள் இனச் சுத்திகரிப்பு செய்யவில்லை - முஸ்லிம்களிடம் எதற்காக, தமிழர் மன்னிப்பு கேட்க வேண்டும்..?

விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிக்கும் நோக்கில் செயற்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (31)  இடம்பெற்ற தனியார் பேரூந்துகள் சங்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இராணுவம் தமிழ், முஸ்லீம் மக்களின் வடகிழக்கு மாகாண காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தது போல் விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களின் காணிகளை அபகரிக்க அனுமதிக்கவில்லை. நான் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்தவன். வன்னி நிலப்பரப்பில் நடந்தேறிய அரசியல் போராட்ட சூழல் தெரிந்தவன்.

துரதிஸ்டவசமான ஒரு சூழலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட அனுமதிக்க முடியாத நிலையிலேயே முஸ்லீம் மக்கள் வடபகுதியில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்படவேண்டி இருந்தது. இருப்பினும் முஸ்லீம் மக்களின் காணிகளை தமிழ் மக்கள் அபகரிக்க என்றும் விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை.

விடுதலைப் புலிகள் தூரநோக்கில் செயல்பட்டதால் தான் இன்று எவ்வித தங்கு தடையும் இன்றி முஸ்லீம் மக்கள் தமது காணிகளில் குடியேறக் கூடியதாகவுள்ளது. முல்லை மாவட்டத்தில் வண்ணாங்குளம், நீராவிப்பிட்டி, கிச்சிராபுரம் போன்ற முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் தமிழ் மக்கள் குடியேற விடுதலைப் புலிகளும் அனுமதிக்கவில்லை. அதனாலேயே அவர்கள் இன்று மீள்குடியேறக் கூடியதாகவுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆரம்பகால போராட்டத்தில் முஸ்லீம் இளைஞர்களும் முக்கிய பங்கு வகித்தனர். முஸ்லீம் மக்களை இனசுத்திகரிப்பு செய்யும் நோக்கில் விடுதலைப்புலிகள் செயற்படவில்லை. அதனால் தான் 20 ஆண்டு காலத்தின் பின்னும் முஸ்லீம் மக்கள் தமிழர்களுடன் சேர்ந்து மீள்குடியேறி வருகிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணம் முஸ்லீம், தமிழ் மக்கள் வாழும் தமிழ் மொழி பேசும் மாகாணம். இங்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக எந்த ஒரு தமிழனும் யாதார்த்தத்திற்கு மாறாக செயல்படமாட்டான். ஒரு சில தமிழ், முஸ்லீம் இனவாதிகளால் தமிழ் மொழி பேசும் எமது மக்களின் ஒற்றுமை குலைக்கப்பட இடமளிக்கமுடியாது. அமைச்சர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடங்கலாகவுள்ளது என கூறுகின்றார். இது உண்மையில்லை.

அதேசமயம் எமது வடகிழக்கு பிரதேச மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தபின் சிங்கள இராணுவம் எமது காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியது பாரிய தவறு.

மேற்படி தமிழ்மொழி பேசும் தமிழ், முஸ்லீம் மக்கள் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கள அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் துணைபோயினர். தமிழ் மக்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எந்தத் தவறும் செய்யாத நிலையில் தமிழ் மக்கள் எதற்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

8 comments:

  1. ஏதோ சம்மந்தம் இல்லாத வரலாறு சொல்லி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கின்றார்

    ReplyDelete
  2. போடா புளுக்கையா

    ReplyDelete
  3. This bloody he doesn't know the pain of his own Tamil people how they suffered from various terrorists group....Then how he will know/ feel the pain of Muslim people...Hw want to bring all of us to the Dark Moon...!!!

    ReplyDelete
  4. Ivarhal adu nanaikirathu endru onai aluhiratham endrakootamthan ivarhal therthal kalathil inavatha karuthukkalai niruthuvarhal mudinthal avarhalin suya roopathai kattuvarkal TNA anaivarum inavathihal

    ReplyDelete
  5. I trust, he also one of the LTTE former cader, thats why he speaks politics with us.

    ReplyDelete
  6. முதலில் இவரை அங்கொடை வைத்திய சாலைக்கு அனுப்பி மூளை சரியாக உள்ளதா எண்று பரிசீலிக்கவேண்டும்!
    உடண்டியாக இவரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும்!
    இப்படியானவர்கள் இருந்தால் உலகம் முடியும் வரை முஸ்லிம் தமிழ் உறவு ஏற்படாது!

    மூளை குளம்பிய நிலையில் பேசும் கவுரவ மக்கள் பிரதிநிதி அவர்களே அப்படியானால் உடுத்த உடையுடன் மட்டும் அனுப்பியதர்கு என்ன காரணம்?

    ReplyDelete
  7. athutahan jaffna 5 jaungtionil vaithu muslim makkalidam nahai muthal anaithu porudkalayum pulihal kollayadittharhalo? varalaru therinthum maraikkum makkal pirathinithi.ithanai evanavathu kathil poo vaithiruppavanukku poi sol.

    ReplyDelete
  8. athutahan jaffna 5 jaungtionil vaithu muslim makkalidam nahai muthal anaithu porudkalayum pulihal kollayadittharhalo? varalaru therinthum maraikkum makkal pirathinithi.ithanai evanavathu kathil poo vaithiruppavanukku poi sol.

    ReplyDelete

Powered by Blogger.