புடின், மிகவும் ஆபத்தானவர்
தாம் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் ரஷ்ய ஜனாதிபதியை விலகி இருக்குமாறு அவரது முகத்திற்கு நேர் நின்று பேசுவேன் என லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ஆவேசப்பட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி புடின் கிழக்கு ஐரோப்பா பகுதிகளுக்கு மிகவும் ஆபத்தானவர், அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அவர் தீங்கு விளைவிப்பவரும் பொறுப்பற்றவருமாவார்.
வலுவிழந்த நிலையில் இருப்போரை கொடுமைப்படுத்தும் ஜனாதிபதி புடினுக்கு எதிராக சர்வதேச அரங்கில் கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
மாயமான மலேசியா விமானம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட எவுகணையால் தாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதை அடுத்து இந்த கருத்தை லிபரல் தலைவர் ஜஸ்டின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முற்போக்கான வாக்காளர்கள் கருத்துக்கணிப்புகளை புறந்தள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜஸ்டின், ஆனால் எவரையும் தாம் கட்டாயப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment