"நரகத்திலிருந்து வெளிவர முயற்சி" - சவூதி அரேபியா, ஈரானும் பங்கேற்பு
சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை, நரகத்திலிருந்து வெளிவருவதற்கான வழியை கண்டுபிடிக்கும் முயற்சி என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி வர்ணித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் முதற்தடவையாக இரானின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தை வியன்னாவில் நடந்துவருகின்றது.
சிரியாவின் அதிபருக்கு ஆதரவான மற்றும் எதிரான தரப்புகளிடையே நிலவும் கருத்துமுரண்பாடுகளுக்கு மத்தியிலும், தீர்வுக்கான முயற்சியில் இந்த பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாக கெர்ரி கூறியிருந்தார்.
Post a Comment