மகிந்தவை தூக்கிக்கொண்டு, எம்மால் ஓடமுடியாது, சந்திரிக்கா + கதிர்காமருக்கும் நிலக்கீழ் வீடு இருந்தது - கோத்த
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் ஆகியோர் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலால் நிலக்கீழ் வீடுகளை அமைத்திருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நிலக்கீழ் அறைகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் ஊடகவியளாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டது. இது இரகசியமாக அமைக்கப்பட்ட பதுங்குக் குழியோ அல்லது மாளிகையோ கிடையாது. அப்போதிருந்த சூழலில் அதிபரின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொறுப்பு எமக்கிருந்தது.
அதன்படி பாதுகாப்பு சபையும், இராணுவ தளபதிகளும் எம்மிடம் முன் வைத்த பரிந்துரைகளுக்கு அமைவாகவே அதிபர் மாளிகையில் நிலத்துக்கு கீழ் ஒரு பாதுகாப்பான வதிவிடத்தை அமைத்தோம். இது ஒன்றும் இரகசியமாக அமைக்கப்பட்டது கிடையாது. அப்போதிருந்த சூழலை மையப்படுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்போது வேண்டுமானால் இந்த வதிவிடம் தேவையற்றதாக கருத முடியும். எனினும் அப்போது புலிகளுக்கு வான் வழியாக வந்து தாக்கும் திறன் இருந்த போதே இந்த நிலக் கீழ் வதிவிடம் தயார் செய்யப்பட்டது.
புலிகள் முதன் முதலாக வான்வழியாக கொழும்புக்கு வந்து குண்டு வீச்சை நடத்திய போது அவர்களது இலக்கு அதிபர் மாளிகையாகவே இருந்தது. எனினும் இடையில் அவர்கள் அதனை மாற்றி களனி திஸ்ஸ மின்சார நிலையத்தின் மீது குண்டு வீசிவிட்டுச் சென்றிருந்தனர்.
போர் இடம்பெற்றுக் கொண்டிருத்த காலப்பகுதியிலேயே அந்த நிலக் கீழ் வதிவிடம் அமைக்கப்பட்டது. யாருடைய தனிப்பட்ட தேவைக்காகவும் அது அமைக்கப்படவில்லை. யாரேனும் ஜனாதிபதியாக பதவி வகிப்பவரின் பாதுகாப்புக்காகவே அமைக்கப்பட்டது.
அப்போது அதிபர் ஒருவரை பாதுகாப்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த விடயமாக இருந்தது. இந்த விடயத்தை இப்படி கலந்துரையாடுவது தவறானது. புலிகளின் விமானம் வரும் போது ஜனாதிபதியைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக எம்மால் ஓட முடியாது.
அதனாலேயே எமது பாதுகாப்புப் பிரிவுக்கு இப்படியான ஒரு நிலக் கீழ் வதிவிடம் தேவைப்பட்டது. அதனால் நாமே அந்த வதிவிடத்தை அமைத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நியாயம்தான்
ReplyDeleteஇது உண்மையாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் முன்னர் கூறிய பொய் பித்தலாட்டங்களால்தான் உண்மையைச் சொன்னாலும் கூட நம்ப முடியாதுள்ளது.
ReplyDelete