"நான்கு புறமும் கடலை வைத்துக்கொண்டு, மீனை இறக்குமதி செய்வது வெட்கக்கேடு"
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர் தொடர்பான விவாதத்தில் ஐ.தே.க.வின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ருப் ஆற்றிய உரை,
இலங்கைக்குள்ள சிறப்புகளில் ஒன்று நான்கு புறம் கடல்வளம் இருப்பதாகும். இந்த வளம் நாட்டுக்கு முழுமையாக பயன்படுத்தப்படுமானால் நமது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்திக்கொள்ள முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டம் அந்த வளம் வேறு நாட்டவர்களால் சூறையாடப்படுகின்றது. குறிப்பாக இந்திய மீனவர்கள் நமது வளத்தின் பெருமளவு பகுதியை சுரண்டிச் செல்கின்றனர். அண்மையில் மன்னார் மாவட்ட மீனவர் சமாசத்தினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய மீனவர்கள் வருடாந்தம் 36 ஆயிரம் தடவைகள் இலங்கைக்குள் அத்துமீறுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வருடாந்தம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நமது கடல் வளம் இந்திய மீனவர்களால் அழிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தகவல் மிகவும் பாரதூரமானது, உடன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
இவ்வளவு கடல் வளங்களை வைத்துக்கொண்டு இன்னும் நாம் மீனை இறக்குமதி செய்கின்றோம் என்றால் இதனைவிட வெட்கக்கேடான விடயம் வேறு என்ன இருக்கமுடியும்? எனவே, நமது வளங்களை நாமே முழுமையாகப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் நமது நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப வேண்டும்.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2013 ஆம் ஆண்டைய அறிக்கையின்படி இலங்கையில் 148 மீன்பிடிப் பிரதேசங்கள் இருக்கின்றன. ஆயிரத்து 81 மீன்டித்தளங்கள் இருக்கின்றன. ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 23 ஆயிரத்து 230 பேர் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 11 மீன்பிடிப் பிரதேசங்களும் 82 மீன்பிடித்தளங்களும் இருக்கின்றன. 32 ஆயிரத்து 660 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஆயிரத்து தொழாயிரத்து 40 பேர் இந்தத் தொழில் மூலம் வாழ்கின்றனர். இது திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் சுமார் 28 வீதமாகும்.
இதன்படி பார்க்கின்றபோது திருகோணமலை மாவட்ட மக்களின் பிரதான ஜீவனோபாய நடவடிக்கையாக மீன்பிடி இருக்கின்றது. குச்சவெளி, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், வெருகல் என்ற ஐந்து பிரதேச செயலகப் பிரிவு மக்கள் கடற்றொழிலோடு சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டம் இந்த மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் கீழ்மட்டத்திலேயே உள்ளது.
இதற்கு பிரதான காரணம் இம்மீனவர்களுள் அதிகமானோர் இன்னும் பாரம்பரிய மீன்பிடியில் மட்டும் தங்கியிருப்பதாகும். இதனால் அவர்களது உழைப்பு அன்றாட நடவடிக்கைகளுக்கே போதுமானதாக உள்ளது. சேமிப்புக்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுவதில்லை. எனவே, அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நவீன மீன்பிடி முறைகளோடு அவர்களை இணைக்க வேண்டியுள்ளது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபடுவதாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றார்கள். இதனால் பெருமளவு தண்டப்பணத்தை அவர்கள் நீதிமன்றத்துக்குச் செலுத்துகின்றனர். ஒரு வகையில் உழைக்கின்ற பணத்தை இன்னொரு வகையில் அவர்கள் அரசுக்குச் செலுத்தும் நிலையே அங்கு உள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் சில காலங்களில் இந்த மீன்பிடிக்கு அனுமதி வழங்கும் அதிகாரிகள் சில காலங்களில் அதனைத் தடை செய்கின்றார்கள்.
எனவே, மீனவர்கள் பலர் அப்பாவிகளாக இருப்பதால் இது சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட மீன்பிடி என்ற விபரம் அவர்களுள் பலருக்குத் தெரியாது. ஆகையால் இதுதொடர்பான விழிப்புணர்வு மீனவர்களுக்கு ஊட்டப்பட வேண்டியுள்ளது. அத்தோடு அவர்களுக்கு மாற்று மீன்பிடி முறையை இனங்காட்ட வேண்டிய கட்டாயத் தேவையும் உள்ளது. இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் படி இவ்வாண்டு திருகோணமலை மாவட்டத்தில் பல நவீன மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் திருகோணமலை மாவட்டத்தவர்கள் அல்ல.
எனவே, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வாறான வசதிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சில விசேட திட்டங்களின் மூலம் மட்டுமே திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடற்றொழில், நீரியல் வளத்துறை நிதிஒதுக்கீடுகள் வருடாந்தம் இம்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
கிண்ணியா, மூதூர், புல்மோட்டை, வெருகல் போன்ற பகுதிகளில் மீனவர் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய வசதிகள் செய்யப்படவேண்டும். மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கட்டம்கட்டமாக செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Well talk, I think he has prepared earlier
ReplyDelete