Header Ads



விசாரணைக்கு வரவும் - பாரிய மோசடி ஆணைக்குழு, மகிந்தவுக்கு உத்தரவு

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார். 

நாளை (15)  காலை 09.00 மணிக்கு இவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். 

எதுஎவ்வாறு இருப்பினும் நாளை அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.