சிகிச்சை பெற்றுவந்த மாணவன் மீது துஷ்பிரயோகம் - இரவு வேளையில் சந்தேக நபர் தப்பியோட்டம்
நோயினால் பாதிக்கப்பட்டு, கண்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மாணவன், லூக்கிமியா நோயினால் பாதிக்கப்பட்டு (குருதியில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக இருப்பதால் உண்டாகும் நோய்) சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சந்தேகநபர், நோயாளர் ஒருவருக்கு உதவியாக குறித்த வாட்டில் இருந்து வந்துள்ளதோடு இன்று (27) அதிகாலை 2 மணியளவில், குறித்த மாணவன் இருந்த இடத்திற்கு சென்று பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட முயன்றுள்ளார்.
இவ்வேளையில் தூக்கத்தில் இருந்து விழித்த மாணவன், சத்தமிட்டுள்ளார்.
இதனை அடுத்து அங்கு பணியிலிருந்த தாதியர்கள், குறித்த நபரை திட்டி, அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் குறித்த மாணவனை உடனடியாக வேறொரு கட்டிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேகநபர் திகண, ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபர், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதோடு, அவரை கைது செய்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment