கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக, புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்கள்..!
- அபூ அஸ்ஜத் -
வடக்கிலிருந்து பாசிச பலிகளினால் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கனவு நினைவாக மாறும் நாள் எப்போது என்று ஏங்கித்தவிக்கும் நிலையினை இன்று எம்மால் காண முடிகின்றது. உலகலாவிய முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு தினமாக ஒக்டோபர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.மக்கள் அழிவு மற்றும் சொத்தழிவுகளையும், பெயர்வுகளையும்,அகதி வாழ்வனையும் பரிசாக கொடுத்த புலிகளுக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, எவருக்கும் எந்த அநியாயத்தையும் செய்யாத கலிமாச் சொன்ன வடபுல முஸ்லிம்களின் அவலத்தை சித்தரிக்கும் ஒரு வரலாற்றினை மீள நினைவூட்டுவது எந்தளவு பிழையென்று எனக்கு புரியவில்லை.
ஒரு சமூகத்தினை முழுமையாக துடைத்தெறிந்து (Ethnic Cleansing) அந்த சமூகத்தினை ஆட்சி அதிகாரங்களால் அடிமைப்படுத்தி வைத்திருந்த காலத்தில் தான் இன்றும் வடபுல சமூகம் இந்த பலவந்த வெளியேற்றத்தினத்தை ஞாபகப்படுத்துகின்றது.1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களுக்கும்,பாசிச கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவெ நாம் பார்க்கின்றோம்.
இன்னும் அகதி என்ற நாமத்ததோடு வேறுமாவட்டங்களில் வாழ்ந்துவரும் வட புலத்து முஸ்லிம்களின் மீட்சியும்,விமோசனமும் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கின்ற போதிலும்,இந்த மக்களின் தாயக வருகைக்காக எமது சமூகம் எடுக்க வேண்டிய நகர்வுகள் ஏராளம்.ஆத வெறும் அரசியல் தலைமைகளிடம் கொடுத்து விட்டுநாம் பார்வையாளர்களாக இருந்துவிட முடியாது.பங்காளிகளாக மாறுகின்ற போது இந்த செயற்பாட்டு வீரியம் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்படலாம். குறிப்பாக எமது நாட்டுக்குள் உள்ள துறைசார்ந்தவர்கள் இந்த வடபுல முஸ்லிம்களின் தாயக வருகைக்காக அவர்களது ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.அது போல் சர்வதேசத்தில் இருக்கும் இஸ்லாமிய உறவுகள் தமது அளுத்தத்தத்தை அந்த நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஜனநாயக விழமியங்களை இன்று எல்லா நாடுகளும் முன்மாதிரியாக கொண்டுள்ளதை அண்யைமக்காலத்தில் இடம் பெற்ற பல சம்பவங்களை வைத்து எம்மால் அறியமுடிகின்றது.அப்படியெனில் பலம் பெயர் எமது உறவுகள் இந்த வடபுல முஸ்லிம்களுக்காக அமைதி பேரணிகளை அமைதியாக நடத்த முடியும்,தமது அமைப்புக்களை கொண்டு பல்தறை சர்வதேச அமைப்புக்களின் உதவியினை நாட முடியும்,வெறுமனே வீடு கட்டி அவர்களை குடியேற்றுவது என்பது முழுமையான மீள்குடியேற்றம் அல்ல,மாறாக தற்போது வடக்கில் பாசிசத்தின் நிழல்கள் தொடராக மேற்கொண்டுவரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை நிரந்தரமாக அழிப்பதற்கு புதியதொரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும்.இந்த பொறிமுறையினை நடை முறைக்கு கொண்டுவருவதில் சர்வதேசத்தின் தலையீடு குறிப்பாக பலம் வாய்ந்த முஸ்லிம் நாடுகளின் உதவி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்,
இலங்கையில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்கள் ஒன்றுபடுவதன் மூலம் இந்த வடக்கில் இருந்து துரத்தப்பட்ட எமது சமூகத்தினரது பல தேவைகளை இயன்றளவு பெற்றுக்கொடுக்க முடியும்,இந்த பயணத்தில் நாம் எம்மால் ஆன எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.இந்த சமூக கடமையில் எமது பங்களிப்பு என்பது மிகவும் தேவைாயனது,கடுகு சிறிது காரம் பெறிது என்று சொல்வது போன்று எண்ணங்கள் துாய்மையாக இருக்கின்ற பொது அதனது பலாபலன்கள் மட்டில்லாதது என்பதை இஸ்லாமியர்களாகிய நாங்கள் நன்கு அறிந்து விஸ்வாசம் கொண்டுள்ளோம்.
இந்த நிலையில் தான் இன்றைய வெள்ளிக்கிழமை நோக்கப்பட வேண்டியுள்ளத.இந்த மக்களது மீள்குடியேற்றத்துக்கு உதவி செய்ய துடிக்கும் இதயங்கள் தமது பலவிதமான முயற்சிகளையும்,இளுத்தங்களையும் அரசுக்கும் சர்வதேசத்திறகும் கொடுத்துவருகின்றனர்.இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் நாடு தழுவிய முறையில் வடக்கு முஸ்லிம்களை கௌரவமாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம் பெறவுள்ளது.இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளில் நீங்கள் கலந்து கொள்வதோடு, நீங்களும் உங்களது பள்ளிவாசல்களுக்கு முன்பாக இந்த சமூகப் பணியினை ஏற்பாடு செய்யுங்கள்.இன்று எமக்கான் ஊடகம் இல்லாத நிலையில் இணையத்தளங்கள்,பேஸ்புக் மூலம் இதனை சர்வதேச மயப்படுத்த நடவடிக்கையெடுங்கள்,இது தான் இந்த வடபுல முஸ்லிம்களுக்காக நாங்கள் செய்யும் ஒரு துளி முயற்சி என்பதை புரிந்து கொள்வோம்.
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையினை இறைவன் எவ்வித திறையுமின்றி ஏற்றுக்கொள்கின்றான் என்ற நபி அவர்களின் அமுதவாக்கில் இருந்து கற்றுக்கொண்டு ஜூம்ஆவின் பின்னர் விசேட இறைப் பிரார்த்தனைகளையும் இன்றைய தினத்திலு் நாம் செய்வோம்.
நண்பர்களே, இலங்கையில் ஏன் தமிழர் - முஸ்லிம் என்று இன ரீதியாக பிரிக்கின்றீர்கள்? முஸ்லிம்களும் தமிழர்கள் அல்லவா? மதம் என்பது இனமாக முடியாதே?
ReplyDelete