Header Ads



யானைக்கும், மக்களுக்குமிடையிலான மோதலா..? உடனடியாக இங்கு முறையிடுங்கள்

யானைக்கும் மக்களுக்குமிடையிலான மோதல் தொடர்பில் அறிவிப்பதற்கு 1992 என்ற அவசர இலக்கம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (29) மாலை 6.00 மணிக்கு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தில் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தலைமையில் நடைபெறவுள்ளது.

காட்டு யானைகள் கிரமாங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதால் சொத்து சேதம் மற்றும் உயிராபத்தை தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

1992 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்வதனூடாக பொதுமக்கள் வனவிலங்கு பிரதான காரியாலயத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்திய பின்னர் பிரதான காரியாலயம்  பிரச்சினைக்குரிய பிரதேச காரியாலங்களை தொடர்புகொண்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.