Header Ads



கிழக்கு முதலமைச்சருக்கு எதிர்ப்பு, ஓட்டமாவடியில் ஹர்த்தால்

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன் கிழமை ஓட்டமாவடியில் கர்த்தால் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஆயிரம் பாடசாலை நிகழ்ச்சி உள்வாங்கப்பட்டு மஹிந்தோய விஞ்ஞான ஆய்வு கூடம் என பெயரிடப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

இவ் ஆய்வு கூடமானது  நாட்டின் தெரிவு செய்யப்பட்ட  மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளில் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக விஞ்ஞான ஆய்வு கூட அறைகள்,கணித கற்கை அறை, தகவல் தொழில் நுட்ப அறைகள்,கனிணி கூடம் என சகல வசதிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு  அனைத்து வளங்களையும் உள்ளீடுகளாக  கொண்டுள்ளது.

இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல மாவட்டங்களுக்கு விஜயம் செய்து திறந்து வைத்தார்.

பூர்த்தி செய்யப்படாமல் இருத்த கட்டிடங்கள் மற்றும் புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் “விஞ்ஞான ஆய்வு” கூடமாக பெயர் மாற்றப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாகவே இவ் ஆய்வு கூடம் ஓட்டமாவடி கல்வி கோட்டத்தின் குறிந்த இரு பாடசாலைகளில் ஆய்வு கூடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண கல்வி பணிமனை மேற்கொண்டது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அவர்களை கொண்டு திறக்குமாறு வலயக்கல்வி பணிப்பாளர் ஊடக குறிந்த பாடசாலையின் அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் முதலமைச்சரை கொண்டு திறப்பதற்கு விரும்பாத நிலையிலும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பாடசாலை அதிபர்களினால் நிர்பந்தமான நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

“எமது பிரதேச அபிவிருத்தியில் எவ்வித பங்கும் வகிக்காத இந்த மாகாண முதலமைச்சர் ஏன் எமது பாடசாலை கட்டிடத்தினை திறக்க வேண்டும்? யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது”  முதலமைச்சா் மீது விமர்சனம் எழுத்துள்ளது.

இது பற்றி உரிய முறையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,மாகாண கல்விப்பணிப்பாளர்,வலயக்கல்வி பணிப்பாளர் ஆகிய உயர் மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் இது விடயத்தில் அவர்கள் எடுக்காமை அலச்சிய போக்கினை கையாண்டமைக்காக நாளை புதன் கிழமை கட்டிட திறப்பு விழா அன்று முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூரண கர்த்தால் அனுஸ்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

7 comments:

  1. இது தேவையற்றசெயல் யார் திறந்துவைத்தாலும் யார் கட்டினாலும் நமது ஊருக்கு தேவையான முக்கியமான விடயம் நிரைவேரியுள்ளது என சந்தோசப்படுவதை விட்டுவிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இத்தோடு ஊரின் குரைகள் முடியவில்லையே இன்னும் நிரைய இருக்கலாம் பொருமையோடு கேட்டுப்பெருவதே சிறந்தவிடயம்

    ReplyDelete
    Replies
    1. Minster ameer Ali vanthal accept pannuvarhal namathu mosamana samuham

      Delete
  2. This is I would says " Mattakkalppu Mattayan" politics.

    ReplyDelete
  3. இப்பிரதேசத்தில் இப்படியான ஓர் அமைப்பு இருந்திருந்தால் எப்பயோ கல்குடா சமூகம் முன்னேறி இருக்கும் . இவர்கள் மழை காலங்களில் முளைக்கும் காளான் போன்றவர்கள் . இப்பிரதேசத்தில் நல்லது நடக்கும் போது மாதிரம் குறிக்கிட்டு தடுப்பார்கள். அவர்கள் செய்யவும் மாட்டார்கள் செய்யப்போரவன்களே விடவும்மாட்டார்கள் .வைக்கோள் கட்டுலே படுக்குற நாய் மாதிரி

    ReplyDelete
  4. முன்பு அப்படி ஒரு காலம் இருந்தது.இப்போது இல்லை(அமீரலிக்கு எதிராக யார் நல்லது செய்யவந்தாலும் அதை எதிப்பது கர்தால் எடுப்பது) இந்த ஜாகிலியா காலம் முடிந்து விட்டது.

    ReplyDelete
  5. திறப்புவிழாவில் நடந்ததோ வேருவிதமாக இருக்கிரது, வாப்பாவைவிட தன்மகன் பெரியவேலைசெய்தால் அதற்கொரு சொல்சொல்வதுன்டு அதுபோல்தான் ஆரம்பத்தில் சென்றவருக்கும் அடுத்துவந்தவருக்குமுல்ல உறவும் எவருமே தன்பொக்கட்மனியை இதற்கு செலவிடவில்லை மக்கள் பணம் மக்கலுக்காக செலவிடப்பட்டுள்ளது இதில் மார்தட்டிபேசுவதற்கு எதுவுமேயில்லை

    ReplyDelete

Powered by Blogger.