Header Ads



தாரை தாரையாக கண்ணீர் விட்டழுத, கிரிக்கெட் ஜாம்பவான் (இலங்கையில் சம்பவம்)

மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

கடந்த 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத அணியாக  வலம் வந்தது.  இரு முறை உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இந்தியாவிடம் தோல்வி கண்டது. இத்தகைய கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1995ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் கடும் சரிவை கண்டது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ,டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் தற்போது 8வது இடத்தில் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு டெஸ்ட் தொடரை கூட மேற்கிந்திய தீவுகள் அணியால் வெல்ல முடியவில்லை.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,'' தாய்நாட்டுக்காக விளையாடுவது குறித்து நாங்கள் எப்போதும் பெருமிதம் கொண்டிருந்தோம்.அப்போதைய வீரர்கள் ஒரு போதும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடியதில்லை.

தற்போதுள்ள அணியில்,  அது போன்ற வீரர்களை காண முடியவில்லை. ஆனால் அதே வேளையில் மற்ற நாடுகள் இது போன்ற வீரர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்று வருகின்றன.  அணிக்காக எந்த தியாகத்தையும் செய்யக் கூடிய வீரர்கள் இப்போது மேற்கிந்திய தீவுகள் அணியில் இல்லை. அணிக்கு திறமையான வீரர்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தொய்வுதான் தற்போதைய பின்னடைவுக்கு காரணம் '' என்றார்.

கேரி சோபர்சின் இந்த பேட்டியின் போது, அவரது  கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.

கேரி சோபர்ஸ் 1954 முதல் 1974ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 ஆயிரத்து 32 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 235 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

1 comment:

  1. தாய் நாட்டுக்காக விளையாடத் துடிக்கும் பல வீரர்கள் இந்தியாவில் உள்ளனர், அதே போன்று பணமும் கொட்டும், பின்கதவு டீலிங் கூட சில நேரங்களில் நடக்கும்.

    இலங்கையின் கிரிக்கட் கூட, சங்கக்கார, முரளி, ஜெயவர்த்தனா விற்கு பின்னர் தொய்வடைந்தே போயுள்ளது. கிரிக்கட் உண்மையில் ஒரு அலுப்பூட்டும் விளையாட்டு, இந்தியா போன்ற சோம்பேறிகள் வாழும் நாட்டில் வேண்டுமானால் அது பிழைக்கலாம், ஆனால் முன்னேறிவரும், முன்னேறத் துடிக்கும் நாடுகளில் அது தனது இடத்தை இழப்பது தவிர்க்க முடியாதது.

    ReplyDelete

Powered by Blogger.