Header Ads



இன்திபாதா தொடங்கியது - ஹமாஸ் அதிரடி


அல் குத்ஸ் இன்திபாதா (எதிர்ப்பு ) தொடங்கிவிட்டது. அதன் எதிர்ப்பு சுவாலைகள் அணைக்கப்படாது என்று கருத்து தெரிவித்துள்ளார் ஹமாஸின் அரசியல் குழு உறுப்பினரான இஸ்ஸத் அல் ரேஷிக் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரிகளை வன்மையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அல் குத்ஸ் பிரஸ் செய்திகள் வெளியிட்டுள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரத்த வெள்ளத்தில் இஸ்ரேலிய படைகளால் இஸ்ரா ஆபித் கொலைசெய்யப்பட்டமை  ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நோக்கி எதிரடி தருவதற்கு தகுந்த தீயை எதிர் தரப்பே பற்ற வைத்து இருக்கின்றது.

ஜெருசலம் மற்றும் அல் அக்ஸா மசூதி குறித்து பிரச்சினையை எதிர்கொள்ள நாங்கள் உயிருக்கு பயப்படமாட்டோம். இஸ்ரேலியர்கள் பலஸ்தீனை ஒரே நாடக அங்கீகரிக்க வேண்டி இருக்கின்றது. 
.
இஸ்ரா ஆபீத் மரபணு பொறியியல் துறையில் படிக்கும் பல்கலைக்கழக மாணவி ஆவர். அபுலா பேருந்து நிலையத்தில் இஸ்ரேலிய படைகளால் சுடப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் கொல்லப்பட்டார். இஸ்ரேலியர்கள் தரப்பு கொல்லப்பட்ட இஸ்ரா என்ற யுவதி  காவலாளியை குத்துவதற்கு திட்டம் தீட்டினால் என்று கூறும் நிலையில் , அண்மையில் வெளியான வீடியோ ஆதாரம் அவள் சுடப்படும் போது அவள் கையில் எதுவும் இல்லை என்பதை நிருபித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் அராப் 48 போன்ற ஊடகங்களில் வெளியான இந்த விடியோ உலக மக்களின் கவனத்தை பெற வேண்டும் . இஸ்ரேலியர்களின் அடக்கு முறைக்கு எதிராக உலக மக்கள் திரள வேண்டும்.

செய்திகள் - அபூஷேக் முஹம்மத்

No comments

Powered by Blogger.