அமெரிக்க அக்கிரமத்தின் அத்தாட்சி
வியட்நாமில் 1972 ஆம் ஆண்டு போடப்பட்ட ரசாயன வெடிகுண்டினால் காயமடைந்த 9 வயது சிறுமிக்கு 52 ஆண்டுகள் கழித்து லேசர் சிகிச்சையளிக்க அமெரிக்க மருத்துவமனை ஒன்று முன்வந்துள்ளது.
வியட்நாமில் உள்நாட்டுப்போர் நடந்தபோது, தெற்கு வியட்நாம் போட்ட பெட்ரோலிய ரசாயன நாப்பாம் குண்டினால், அதிர்ச்சியடைந்து உடை தீப்பற்றி உடலிலும் பரவியதால் கழற்றிவிட்டு, ரத்தகாயங்களோடு ’சுடுது சுடுது’ என்று அழுதுகொண்டு முகத்தில் பீதி பரவ நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடிவருகிறாள்.
அந்த 8 வயதான பான் தி கிம் புக் என்ற சிறுமி, தன் சகோதரன் மற்றும் உறவுக்காரச் சிறுவர்களுடன் வருவது, ராணுவ வீரர்கள் மற்றும் குண்டுபுகையின் பின்னணியோடு புகைப்படத்தில் பதிவாகியிருக்கிறது.
ரஷ்யா, சீனா வடக்கு வியட்நாமுக்கு ஆதராவாகவும் அமெரிக்கா தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாகவும் நின்று கடந்த, 19 வருடங்களாக நடத்திய உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
அதற்கு, உலகம் முழுதும் உள்ள ஊடகங்களில் போருக்கு எதிரான புகைப்படமாக இந்த புகைப்படம் வெளியானது ஒரு முக்கிய காரணம்.
அவர் படம் எடுத்துவிட்டு, அந்த சிறுமியை தன் காரிலேயே ஏற்றிச்சென்று மருத்துவமனையிலும் சேர்த்து உயிர் பிழைக்கவைத்தார்.
இந்த படத்தை முதன்முதலாக முதல் பக்கத்தில் பிரசுரித்த நியூயோர்க் டைம்ஸ், புகைப்பட துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதை நிக் வுட்க்கு வழங்கியது.
தற்போது, அவருக்கு 52 வயதாகிறது, ஆனால் இத்தனை காலமாக அந்தத் தழும்புகளைப் போக்கவோ, வலியை குறைக்கவோ தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கனடா நாட்டில் தனது கணவனோடு தற்போது வசித்து வரும், கிம் புக்குக்கு இலவசமாக லேசர் சிகிச்சையளிக்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகர மருத்துவர் முன்வந்துள்ளார்.
நாபாமின் தாக்கத்தால் கிம் புக்குக்கு பொதுவான அளவுள்ள தோலைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாகியுள்ளது.
இவருக்கு இருப்பதில் பாதி வலி இருந்திருந்தால் கூட யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள் என்று இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
God bless America
ReplyDeleteTo Jaffna Muslim .com...
ReplyDeleteEvery human has respect,, even kids further we should have good practice in posting photos, Yes.. you should not post full naked photo of the kid. there ways to cover the private parts.. please do edit the photo in future and respect the victim.
Mr. Jiffry abdeen
ReplyDeleteGod Bless America for what ? to dropping napalm bomb.
காட் ப்ளஸ் அமெரிக்க? காட் என்ன மடையனா? அதற்காக ப்ளஸ்?
ReplyDeleteஐயோ ராஷீத். அது உலகம் முழுவதும் பிரபலமான புகைப்படம், அது மிகவும் சிறிய சிறுமி, எல்லாவற்றையுமே வக்கிரமாகவே பார்த்துப் பழகி விட்டீர்கள்,
ReplyDelete