Header Ads



"மகிந்த ராஜபக்சவுக்கு, தலையாட்ட நேர்ந்தது"

கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  உரையாற்றிய அமைச்சர் பைஸர் முஸ்தபா,

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலம் ஒரு இருண்ட காலமாக இருந்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகாமல் போயிருந்தால், ஜெனிவா யோசனை இதனை விட பல மடங்கு பாரதூரமானதாக இருந்திருக்கும் எனவும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

பைஸர் முஸ்தபா கடந்த அரசாங்கத்தில் பணியாற்றினார் என்பதால், அந்த இருண்ட காலத்திற்கு அவரும் மகிந்த ராஜபக்சவுக்கு உதவினார் தானே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் முஸ்தபா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக சிறிய தரப்பினரின் தீர்மானங்களுக்கு தாம் உட்பட பலர் தலையாட்ட நேர்ந்ததாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.