Header Ads



மாட்டிறச்சி விவகாரம் - நரேந்திர மோடியின் வாய் திறந்தது

தாத்ரி மாவட்டம், பிஷாடா கிராமத்தைச் சேர்ந்த இக்லாக் (50) என்பவர் பசு  இறைச்சியை உட்கொண்டதாக எழுந்த வதந்தியை அடுத்து கடந்த மாதம், 200 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவியது. இதற்கு பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன் எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது.

இதனை அரசு எதிர்க்கிறது. பா.ஜ.,வும் சரி, அரசும் சரி, நானும் சரி இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாக்., பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. No use of giving warning speech.. Rather we need action... yes arrest and punish the murders and band the group activity lifetime. Then we feel your speech to be truth.

    ReplyDelete

Powered by Blogger.