மருதூரின் முத்துக்கள், பாராட்டி கௌரவிப்பு
( இவன் )

இம்முறை 2015 ம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற சாய்ந்தமருது கோட்டத்தைச் சேர்ந்த 28 மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் புலமைப்பரிசிலுக்குத் தகுதி பெற்ற 28 மாணவ, மாணவிகள் இன்று 27. 10. 2015 ம் திகதி முஸ்லிம் இளைஞர் ஆய்வு சமூக மன்றத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் ஏ. எல். எம். சலீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி என். ஆரிப், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் ஆகியோருடன் வர்த்தகப் பிரமுகர்களான ஜனாப். ஜலீல், ஜனாப். மஹ்ஜூன் முஹம்மத் ஆகியோருடன் பாடசாலைகளின் அதிபர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேற்படி பாராட்டு விழாவானது மாணவர்களை மாணவர்களே ஒரு பொது விழாவாக நடத்தியதாகவே இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பேசிக்கொண்டனர். ஏனெனில், மேற்படி அமைப்பானது கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களைக் கொண்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment