Header Ads



புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள பொலிசார், மிலேச்சத்தனம் என மங்களவும் கண்டனம்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான தொலைக்காட்சி செய்திகளைப் பார்வையிட்டால், பொலிசாரின் மானம் நாறிவிடும் என்று கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி,

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் குறைந்த பட்ச அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தியதாக கூறுகின்றனர்.

அத்துடன் கீழே விழுந்த மாணவிகள் விடயத்தில் மனிதாபிமானமாக நடந்து கொண்டதாகவும் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

பொலிசார் என்ன கூறினாலும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைத்த விதம் குறித்து தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிபரப்பானது.

அதன் போது பொலிசார் நடந்து கொண்ட முறை தெளிவாக காணமுடிந்தது. வன்முறை என்பதுதான் அவர்களின் பாசையில் மனிதாபிமானம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றார்களோ தெரியாது.

உண்மையில் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளைப் பார்த்தாலே பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் பொலிசார் காட்டிய மனிதாபிமானம் நாறிவிடும் என்றும் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிலேச்சத்தனமான தாக்குதல் என்று மங்கள சமரவீர கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாகரிகமடைந்த சமூகத்தில் கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பன ஜனநாயக உரிமைகளாகும். ஆனால் பொலிசார் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மிலேச்சத்தனமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறான கொடூரங்கள் மைத்திரி-ரணில் யுகத்திற்கு ஒருபோதும் பொருத்தமற்றது என்பதை வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த ஆட்சியில் நடந்த இவ்வாறான தவறுகளின் காரணமாகவே பொதுமக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.

எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னும் பொலிசாரின் ஆணவப் போக்கு மாறவில்லை என்பதையே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அவர்களின் தாக்குதல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

இவ்வாறான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும் என்றும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.