Header Ads



விலங்குகள் பலி பூஜை நடத்தப்பட்டதினாலேயே, நேபாளத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது - மேர்வின் சில்வா

விலங்குகள் பலி பூஜை நடத்தப்பட்ட காரணத்தினாலேயே நேபாளத்தில் 2015 ஏப்ரல் மாதம் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஆலயம் ஒன்றில் பாரிய விலங்கு பலி பூஜை நடத்தப்பட்டது. இதுவே நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட காரணமாக அமைந்தது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அந்த பலி பூஜை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்பு காரணமாக 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் பலி பூஜை நடத்தப்படவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. இந்த மனுசனுக்கு கடவுள் ஆராட்சியாளர் எனும் பதவிகொடுத்தாள் பொருத்தமா இருக்கும் அரசாங்கம் கவனத்தில்கொல்லுமோ தெரியாது

    ReplyDelete
  2. கையில் எடுக்க இனி ஒன்றும் இல்லை இதையாவது எடுத்து பார்ப்போம் தலை நிமிர முடியுமா என்று

    ReplyDelete
  3. அரசியல் பிட்ச்ச்சைக்கரன் என்பதால் புளைப்புக்கு வழி தேட வேண்டுமல்லவா. மகிந்த கையை வாரினார். மைதிரியிடம் பிச்சை கேட்டார், கொடுக்க வில்லை. ஏதோ பித்தலாட்டம் ஆடுகிறார். உண்மையான பற்றுள்ள ஒருவர் கூறியிருந்தால் நாம் இதற்கு எதிரானவர் என்றாலும். வாயை மூடிக்கொண்டாவது இருக்கலாம். எமது கொள்கையை நாம் பின்பற்றிக்கொண்டு.

    ReplyDelete
  4. இலங்கையிலும் இப்படியான "விஞ்ஞான அறிவு" படைத்த பயல்கள் இருக்கின்றார்களா?

    பெண்கள் ஜீன்ஸ் போடுவதுதான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று ஒரு மேதாவி கூறி இருந்தார், இப்பொழுது இன்னொரு மேதாவி இப்படியாக காரணம் சொல்கிறார்.

    உணவுக்காக மிருகங்களை பலியிடுவது நியாயமானது, மதக் காரணங்களுக்காக பெருமளவான மிருகங்களை, உணவுத் தேவைக்கு அதிகமாக பலியிடுவதும் தவறுதான்.

    ஆனால் மிருகங்களை பலியிடுவதால் நிலநடுக்கம் எல்லாம் வருவதில்லை. ஆயிரக்கணக்கில் மனிதர்களை பலியிட்டார்கள், நல்ல மனிதர்களின் இதங்கள் மட்டும் தான் நடுங்கின, ஒரு நிலமும் நடுங்கவில்லை.

    ReplyDelete
  5. Politicians will do/tell anything to get famous. Nilavan athu Indian politicians endralum or Sri Lankan politician endralum same.

    ReplyDelete
  6. இங்கு பின்னூட்டமிடுபவர்களிலும் இவரைப்போன்ற மௌட்டீக சிந்தனை படைத்தவர்கள் இருக்கின்றார்கள். ஆனாலும் தங்களை உயர்வாகக் காண்பித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்றார்கள். ஆயினும் தமது அறிவுக்குச் சவால் விடப்படும்போது தாக்குப்பிடிக்க வழியின்றி நாற்றமெடுக்கும் வகையில் பிறரை வைவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.