Header Ads



ஈரான் செல்கிறார் ஹலீம்

ஆசியா பாராளுமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் ஈரான் தெஹ்ரானில் நவம்பர் 2 ஆம் திகதி முதல்  5 திகதி வரை  நடத்தும் செலயமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் சபாநாயகரின் சார்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்  நாளை 1 ஆம் திகதி ஈரான் விஜயம் மேற் கொள்கின்றார்.

விசேடமாக சமூவியல் மற்றும் கலாசாரம் தொடர்பாக நடைபெறும் இந்நிகழ்வில் ஆசியாப் பிராந்தியத்திலுள்ள பாராளுமன்ற சபாநாயகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கைப் பாராளுமன்றத்தின சபாநாயகர் சார்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம், எச். ஏ. ஹலீம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

1 comment:

  1. Mr. Haleem
    You have to be carefull. Place that you are visiting is worst than Israel.

    ReplyDelete

Powered by Blogger.