ஜெயராஜ் பெர்னாண்டோ உள்ளிட்ட எம்.பி.க்களின் கொலைகைள விசாரிக்க குழு - ரணில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது கொல்லப்பட்ட தி.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், த.மு. தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் கொலைச்சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழேயே இந்தக் குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ் விசாரணை தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கே, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதே அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள், மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தமையினால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்கொண்டுவருவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்பதையிட்டே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் .எச் எம் .அஸ்ரப் அவர்களின் மரண மர்மதினை கண்டறிய இது வழி கோ லுமா .உரியவர்கள் கவனம் செலுத்த எதிர்பார்கின்றேன் .
ReplyDeleteM.E.H Maharoof.. avarhalin maranamum adakka vendumey
DeleteKattayam Ashraf Awarkalin maranam thodarpaaka Visaaranai nadaththappada wendum
ReplyDeleteஅஷாரப் அவரகளின் மரணம் பற்றி பேச ஒரு நாதி இல்லாத இலமை உள்ளது அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.நம் தலைவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னணி என்ன எனறு கண்டு பிடிப்பது இவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
ReplyDeleteஅடுத்த தேர்தலை நோக்கிய விழீப்பூட்டல் போல்தான் தோனுது எதற்கும் பொருத்திருந்து பார்ப்போம்
ReplyDelete