நரகில் பிரவேசிக்கச் செய்யும் ஒரு 'வார்த்தை'
قال النبي صلى الله عليه وسلم :
( إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لَا يَرَى بِهَا بَأْسًا يَهْوِي بِهَا سَبْعِينَ خَرِيفًا فِي النَّارِ (متفق عليه
அங்கும் இங்கும் இருந்து அறிவிலிகள் சிலரால் எமக்குக் கடத்தப்படும் தவறான சிலத் தகவல்களை நாம் சரியாக ஆராயாமல் பிறரைப்பற்றிய எத்தனை வகையான தவறான முடிவுகளுக்கு வந்து விடுகின்றோம்.
அவைகள் சமூகத்தில் எத்தனைவிதமான பாதிப்புக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பது பற்றி எல்லாம் அந்த அறிவிலிகள் சிந்திக்கத் தவறிவிடுகின்றார்கள்.
1. எத்தனையோ குடும்பங்களைப் பிரித்து விடுகின்றன.
2. எத்தனையோ நண்பர்களை பகைவர்களாக்கி விடுகின்றன.
3. எத்தனையோ உறவுகளைத் துண்டித்து விடுகின்றன.
4. எத்தனையோ நெருக்கமானவர்களைத் தூரமாக்கி விடுகின்றன.
இப்படியாக இன்னும் எத்தனை எத்தனையோ வேண்டாத விபரீதங்களை நம் சமூகத்தில் அரங்கேற்றி விடுகின்றன.
இத்தகையவர்களைப் பற்றித்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் :
“ஒரு மனிதன் ஒரு வார்த்தையைப் பேசி விடுகின்றான் அதனைப்பற்றி அவன் கணக்கில் கொள்வதில்லை அதன் மூலம் அவன் எழுபது ஆண்டுகள் நரகில் புரட்டப்படுவான்” (நூல் : புகாரி, முஸ்லிம்)
கவனயீனமாகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தைக்குத்ததான் எழுபது ஆண்டுகள் நரக வேதனை அப்படியாயின் சதா இதனையே திட்டம் போட்டுப் பேசித்திரிபவர்களின் நிலையைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
-முனாப் நுபார்தீன்-
May Allah Bless my brother, for this reminding, it will be beneficial to those who think before writing,
ReplyDeleteThis will apply to every one of us.
ஜஸாகல்லாஹு ஹைரன். ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் செய்யும் பெரும் பாவம். எங்கள் நாவையும் பேனாவையும் பாதுகாப்போமாக.
ReplyDelete