"ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணை"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டு வரமுடியும் என்றும் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் குணதாச அமரசேகர இந்தக் கருத்தைவெளியிட்டிருந்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை தன் கையில் வைத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, மனித உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் அதனை சமர்ப்பிக்கவில்லை.
இது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதற்கு எதிராக எந்த நேரத்திலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முடியும்.
அத்துடன் ஜெனீவா அமர்விற்கு பின்னர் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியதில் எதுவித அர்ததமும் இல்லை.
அவ்வாறு கூட்டுவதாக இருந்தால் ஜெனீவா அமர்விற்கு முன்னர்தான் கூட்டியிருக்க வேண்டும். தற்போது அமெரிக்க யோசனையை இலங்கை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில் சர்வ கட்சி மாநாடு அவசியமற்றது.
ஆனால் ஜெனீவாவில் அரசாங்கம் விட்ட தவறை மறைத்துக் கொள்ளவே ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார்.
Do not Ameradasa has pure mind to talk in positive way?
ReplyDelete