யோசித ராஜபக்ஸ குறித்த, புதிய தகவல்கள் வெளியாகியது
உரிய தகுதியின்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ கடற்படையில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யோசித கடற்படையில் இணைந்து கொண்டமை குறித்து விசாரணை நடத்திய குழுவினருக்கு வரையறைகள் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
ரியர் அடமிரால் பி.வெட்டவௌ தலைமையிலான விசாரணைக் குழுவினர் இந்த விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
புதிய அரசாங்கம் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயந்த பெரேரா மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
கடற்படை கெடட் அதிகாரி ஒருவரைத்தெரிவு செய்வதற்கு சில அடிப்படைத் தகுதி நிர்ணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சாதாரண தரப் பரீட்சையில் ஒரே தடவையில் ஆறு திறமை சித்திகளைப் பெற்றுக்கொள்ளவில்லை, சிங்கள மொழிப் பாடத்தில் ஒரே தடவையில் சித்தியெய்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யோசித ராஜபக்ஸவின் தனிப்பட்ட ஆவணக் கோவையில் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் றோயல் கெடட் பயிற்சிக்காக கட்டணம் செலுத்தியே இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யோசித ராஜபக்ஸ, உள்நாட்டில் பயிற்சி பெற்றுக் கொண்ட போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்கு மேலதிகமாக சிரேஸ்ட மூன்று கடற்படை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கியிருந்தனர் என குறிப்பிடப்படுகிறது.
உக்ரேய்னில் பயிற்சி பெற்றுக்கொண்ட போது பாதுகாப்பு அமைச்சு யோசித ராஜபக்ஸ ராஜபக்ஸவிற்கான செலவுகளை ஈடு செய்துள்ளது.
யோசித ராஜபக்ஸ பயிற்சி பெற்றுக் கொண்டதன் பின்னர் அப்போதைய கடற்படைத்தளபதி கரன்னாகொடவின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறந்த முறையில் பயிற்சி பெற்றுக் கொண்டதற்கான விருதும் வாள் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment