ஓ.. சீர்திருத்தவாதியே...!
இந்தக் கவிதை மூலமாக சில உள்ளங்கள் சிறிது சிந்திக்க ஆரம்பிக்குமெனில் அதுவே, இப்படைப்பின் வெற்றி..!
-Dr. Mohamed Hasan Basree-
கூட்டு துஆ பிழையென்றீர்
குனூத் ஓதல் தவறென்றீர்-விரல்
ஆட்டுவித்து ஓதினால்தான்
அத்தஹியாத்தும் சரியென்றீர்.
ஏட்டிலுள்ள சட்டங்கள்
எல்லாமே பிழையென்றீர்.
காட்டு காட்டு ஆதாரமென்று
காண்பதெல்லாம் குறைகண்டீர்.
பெருநாள் தொழுகையது
பெருவெளியில் திடலிலென்றீர்
திருநாள் அதனிலும் பல
திருத்தங்கள் கண்டுபிடித்தீர்
பர்ளான கடமைகளையே நாம்
பாதியளவும் செய்யாதபோது
அருளெங்கு கிடைக்கும்? அவை
அர்த்தமற்றல்லவா கிடக்கும்!
குதிகாலைத் தேய்த்துக்கழுவ
கிழவருக்கும் தெரியலையே!
அதிகாலைத் தொழுகைக்கு
அரைவரிசையே நிரம்பலையே! - யூத
சதிகாரன் சதியென்று
சொல்வது நம் பிழையே!
மதிகெட்டு மறைமறந்து
மாள்வது நம் குறையே!
பாங்கினோசை கேட்டாலும்
பாதிசனம் கேட்பதில்லை.
ஏங்கி நிற்கும் பள்ளிவாசல்கள்
எதுவும் இங்கு நிறைவதில்லை.
தூங்கியே சனம் வழிகிறதே
தூய்மையான சுபஹ் பொழுதில்,
தாங்கிடுமா நரக வேதனைகளை?
தாண்டிடுமா கப்ர் சோதனைகளை?
ஏழைவரி ஸகாத் அதனை
எவரிங்கு கொடுக்கிறோம்?
கோழைபோல் ஒளித்துக்கொண்டு
கொடுப்பதற்கே மறுக்கிறோம்!
நாளை மறுமையில் தப்பித்து
நாமெங்கே போவது? நூறு
சூளைபோல் சுடும் நரகின்
சூட்டிலே என்ன ஆவது?
ஆதன உரிமைச்சட்டம்
அரைவாசியாவது தெரிந்தால்தானே
சீதனத்தை ஒழிக்கலாம்
சீர்திருத்தலாம் சமூகத்தை
சோதனைகளுக்கு சமயப்பாடம்
சொற்பமாகப் படிக்கிறோமே! நரக
வேதனைக்குப் பயந்து
வாழ்வதனில் கொள்கிறோமா?
இந்தியாவை போன்று இலங்கையில் மேடை போட்டு இவைகள் பேசப்படாவிட்டாலும் ஆங்காங்கே சிறு சிறு அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இல்லை .இது போன்ற சுன்னத்தான காரியங்களில் இஸ்லாமிய சமூகம் பிளவு பட்டு ,அடுத்த முஸ்லிமை தூற்றி,வசை பாடி ஆலிம்களை இழிவுபடுத்த்தி ,இறைவன் தனது இயக்கத்திட்கு (ஜமாஅத்) நேரடியாக வாஹி இறக்கியது போலும் ,சுவனத்திட்கு தான் தான் இங்கிருத்து மாக்களை தேர்வு செய்து அனுப்புகிறோம் என்ற நினைப்பிலும் சிலர்கள், தான் கொண்ட கருத்திட்கு ,விளக்கத்திற்கு மாற்று விளக்கம் சொல்லும் எல்லா முஸ்லிம்களையும் காபிர் ,முஷ்ரிக் , பித்அத் வாதி , கப்ரு வணங்கி ,சூனியக்காரன் என்று பாத்துவா கொடுக்கும் இயக்கங்களை விட்டும் அல்ல்ஹா நம்மை பாதுகாப்பானாக.
ReplyDeleteHe is targetting someone first then he is advising for publim....
ReplyDeleteTotally, he confused himself and he want to confuse the public too...
First of all, he must learn Islam and talk to the public...
வரப்புயர நீர் உயரும் ... நீர் உயர நெல் உயரும்... நெல் உயர குடி உயரும் ... குடி உயர .......? இங்கு படிப்பு உயர்ந்து இருந்தால் மற்றைய ஒன்றும் உயர்ந்தில்லை. சியா சுன்னி பிரச்சினைய தீர்க்க முடியாது வெட்டி கொத்திக்கொல்கிரர்கள். இங்கு சமுகத்தை ஒற்றுமை படுத்த வேண்டிய படித்தவர்களே இப்படி எழுதுரர்கள். படிப்பதற்கே அலுப்பாக உள்ளது. இன்னும் பல பிரிவை உண்டாக்குகிறார். தவ் கல் ஒரு போக்கு. அத விட இது ஒரு போக்கு. தயவு செய்து ஆளுக்கு ஆள் வெட்டிக்கொல்வதை நிறுத்துங்கள்.
ReplyDeleteஜப்னா முஸ்லிம், நீங்கள் எனது கோமான்டையே கட் பண்ணுகின்றீர்கள் என்றால், எவ்வளவு பெரிய அநியாயம்? அவமானம்.
ReplyDeleteGood one
ReplyDelete