அநாதைகளை பராமரிப்பது சமூகப்பொறுப்பாகும் (ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்)
-அபூ உமர் அனவாரி BA மதனீ-
இஸ்லாம் பலமானவர்கள் மீது மாத்திரம் கரிசணை காட்டி பலவீனமானவர்களை புறம் தள்ளி விடவில்லை.மாற்றமாக அவர்களை அரவனைத்து செல்வதை காணலாம். பலவீனமானவர்களுக்கு எத்தகைய உதவி ஒத்தாசைகள் செய்தால் அவர்கள் நன்மை அடைவார்கள் என்பதை இஸ்லாம் காட்டியுள்ளது.சமூகத்தில் பெண்கள் வயோதிபர்கள், நோயுற்றோர்,சிறுபிள்ளைகள்,விதவைகள்,அநாதைகள் என பலவகையினர் காணப்படுகின்றனர், இவர்களுக்கு அன்பும் கருணையும் காட்டுமாறு இஸ்லாம் அதிக ஆர்வம் காட்டுகிறது.இதற்கான மகத்தான கூலிகளையும் அன்பளிப்புகளையும் அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான்.தொழுகையின் போது கூட பலவீனமானவர்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோரை கவனத்தில் கொள்ளமாறு வழியுறுத்துகிறது.அல்லாஹ் கடமையாக்கிய கடமைகள் நோயின் போது சில சலுகைகளாக அவர்களுக்கு மாறுகின்றன.
இத்தைகை பிரிவினர்களில் அநாதைகள் என்போர் முக்கியமாக அன்பும் கரிசணையும் காட்டப்பட வேண்டியவர்கள்.இவர்களுக்கு நன்மை செய்வதும் இவர்களை சமூகத்தின் உயர்தவர்களாக மாற்றுவதும் சமூகத்தின் கடமை.இன்றைய காலத்தில் நிகவும் அழிவுகள் அனரத்தம்,ஆணின் குறைந்த ஆயுட்காலம் இவைகள் அதிகமான அநாதைகளை தோற்றவிக்கிறன.இவர்களை சீராக பராமரிக்கப்படாத போது சமூகம் பல பிரச்சிணைகளை சந்திக்கும் என்பது உண்மை.இவர்களை பற்றி இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கும் போது.
இஸ்லாத்தின் பார்வையில் பருவவயதை அடைய முன் தந்தையை இழந்தவர் அநாதை எனப்படுவார்.இவர்கள் வாழ்க்கையில் அச்சாணியை இழந்தவர்களை போன்றவர்கள் எனவேதான் இவர்களை கண்ணியப்படுத்தி அரவனைக்கும் படி இஸ்லாம் அனைவரையும் அழைக்கின்றது.இவர்களை பராமரிப்பது உயர்ந்த இஸ்லாமிய பண்பாகும்.இஸ்லாத்துக்கு முன்னர் இவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.அவர்களுக்கென உரிமைகள் கிடையாது அவர்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு அநாதையாக பிறக்கின்றார்கள்.அல்லாஹ் அவர்கள் மூலமாகவே அநாதைகளுக்குரிய உரிமைகள் கடமைகள் என்ன என்பதை முழு மனித குலத்துக்கும் தெளிவுபடுத்துகிறான்.அல்குர்ஆனில்” (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?” (93:6). எனவே ஒருவர் அநாதை எனும் நிலையை அடைவது ஒரு குறையல்ல அது அல்லாஹ்வின் ஏறபாடு.மாற்றமாக அவர்கள் பராமரிக்கப்படமாமை ஒரு குறையாகும்.அவ்வாறே அநாதைகள் என்போர் தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல அந்தஸ்தால் அறிவால் குறைந்தவர்களும் அல்ல.மாறாக அவர்களை பராமரிப்பதன் ஊடாக சமூகம் பல நன்மைகளை அடைகின்றது.
அநாதைகளை பராமரிப்பது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் போது அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் அநாதைகள் ஏழைகள் ஆகியோரை கண்ணியப்படுத்துமாறும் அவரகளுக்கு உதவி ஒத்தாசை செய்யுமாறும் கட்டளையிடுகிறது.உண்மையான விசுவாசிகளின் உயர்பண்பாகவும் இதை கூறுகிது.மேலும் நரகத்திற்க நுழைவதற்கான காரணியாகவும் இது அமைகிறது.என குர்ஆன் கூறுகிறது.அநாதைகளை பராமரிக்காது புறக்கணிப்பது என்பது மறுமைநாளையும் அதில் கூலிகொடுப்பதையும் நிராகரிப்பவரின் பண்பாகும்.இதை குர்ஆன் கூறும் போது. “(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை”(அத்தியாயம் 107 வசனங்கள் 1,2,3.)அவர்களுக்கு உணவளித்து கண்ணியப்படுத்தாமை நரகத்தில் நுழைவதற்கும் அவனின் தண்டனைகளுக்கும் காரணியாக அமைகிறது..குர்ஆன் குறிப்படும் போது.. அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,(அத்தியாயம் :அல் பஃஜ்ர் : வசனங்கள் 18முதல் 21வரை)
அநாதைகளை விரட்டுவது அவர்களை சிறுமைப்படுத்துவது போன்றவற்றை விட்டும் நபி (ஸல்) அவர்கள்ளை தடுக்கின்றான். அது அனைத்து மனிதர்களுக்குமான ஏவலாகும .அல்லாஹ் குறிப்பிடும் போது “எனவே,நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர் - யாசிப்போரை விரட்டாதீர். மேலும்,உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக(அத்தியாயம்.93,வசனங்கள்9,10,11) உளவியல் ரீதியாக அவர்களை புண்படுத்தாது. கண்ணியப்படுத்தி அன்பு கருணை ஆகியவற்றை கொடுப்பது சமூகத்தின் கடமையாகும். உடலாரோக்கியத்தை பேணுவதற்கான விடயங்களையும் மேற்கொள்ள வேண்டும்.அல்லாஹ் அநாதைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுகிறான், உடலாரோக்கியத்துக்கும் வளரச்சிக்கும் உணவு முக்கியமானது.அல்லாஹ் அதிகம் முக்கியமானதை கூறி இருப்பதனால் இதனுடன் தொடர்ப்புடைய ஏனையவைகளும் உள்ளடங்கும்.பொதுவாக அநாதைகளுக்கு எவை எல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் செய்வது கட்டாயம் என்பதை குர்ஆன் கூறும் போது “அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”2:215. அவர்களுக்கு நல்லதை செய்யுமாறு அல்லாஹ் பணிக்கின்றான்.ஒரு சீரான வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கும்.
அவர்களது சொத்துகளுக்கான உத்தரவாதமும் அதை பேணிப்பாதுகாப்பதும். அவர்களது சொத்துக்கள் ஒரு முக்கியமான நம்பிக்கை பொருளாகும் இதை சீரழிப்பது மற்றும் அவர்களுக்கு கிடைக்காது செய்வது போன்றன பெரும் பாவங்களாகும்.அல்லாஹ் குறிப்பிடும் போது இவர்களது சொத்துக்களை நெறுங்க வேண்டாம் என கூறுகின்றான்.நெறுங்குவது பாவம் என்றால் இவர்களது சொத்துக்களை சூரையாடுவது எத்தகைய பாவம். “அநாதைகள் பருவமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்”. 17:34.
அவர்களுக்கான உரிமைகளை மறுப்பதும் தடைகற்களாக இருப்பதும் அவர்களுக்கு செய்யும் அநீதியாகும் இது பாரிய தண்டணைக்குரியது.அவர்களுக்கு பொறுப்பாக செயற்படுவது நன்மைக்குரியது தொண்டும் சேவையும் செய்வது அல்லாஹவினதும் அவனது தூதரினதும் நெருக்கத்தை பெற்று தரும்.அவர்களது செல்வத்தை வீண்விரயமின்றி அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும்.அதன் பின் அவர்கள் உரிய வயதை அடையும் போது அவர்களுக்கு உரிய. முறையில் ஒப்படைக்கவும் வேண்டும்.அவர்களது சொத்துக்களை அநியாயமாக உண்பது நரக நெருப்பை உண்பதற்கு சம்மானது என இஸ்லாம் கடுமையாக வர்ணித்து கூறுகிறது.அவ்வாறே அவர்களது சொத்தை வீணாக பயன் படுத்துவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்று என நபி ஸல் அவர்கள் குறிப்பட்டுள்ளார்கள். 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். அப்போது அதில் அநாதைகளின் சொத்தை உண்பதையும் குறிப்பிட்டார்கள்.ஹதீஸ் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.(நூல் புகாரி, எண் :6857. அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்) .
இவர்களை பராமரிப்பது அடியான் அல்லாஹ் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகும்.இவ்வாறானவர்களை அல்லாஹ் வழிக்கும் போது மேலும், இறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள் 76:8 என அல்லாஹ் சிலாகித்து குறிப்பிடுகிறான்.நபி ஸல் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகின்றார்,இதை பற்றி நபிகளார் குறிப்பிடும். 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள். நூல் புகாரி எண் 5304. அறிவிப்பாளர் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் .
இவையெல்லாம் பார்ரக்கும் போது இஸ்லாம் அனைத்து பிரிவினருக்கும் உரிய உரிமைகளையும் கடமைகளையும் விளக்கியுள்ளமை தெளிவான உண்மையாகும்.
Post a Comment