Header Ads



குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை தடுக்க சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்

குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை தடுக்க சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இனவாத மதவாத அடிப்படையிலான பிரச்சாரங்கள் பேச்சுக்கள் பல்வேறு சிக்கல்களை உருவாக்கியதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன நல்லிணக்கத்தை பாதிக்கும் பேச்சுக்கள், கருத்துக்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இது தொடர்பில் பரிந்துரைகளை செய்திருந்தது.

குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை தடுக்க பொருத்தமான சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.