Header Ads



ரணிலின் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி, இரகசிய பேச்சு நடத்தியமை மைத்திரிக்கு தெரியும்..!

-GTN-

மேல் மாகாணத்தின் மாவட்டம் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைச்சர் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்த்து, புதிய அரசாங்கமொன்றை உருவாக்க இந்த அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தை எதிர்த்துள்ளனர். 2017ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கத்தை கொண்டு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அமைச்சரின் அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே இந்த அமைச்சரின் முயற்சியாக அமைந்துள்ளது.

இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. மஞ்சள் துண்டுக்கு கழுத்தை அறுத்த பரம்பரையில் உள்ளவர்களு்க்கு அந்த பத்திவரலாம்!

    ReplyDelete
  2. valga elangai kalla kuttam

    ReplyDelete

Powered by Blogger.