யாழ்ப்பாணத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி கவனயீர்ப்புப் போராட்டம்
-பாறுக் ஷிஹான்-
தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.30 மணியளவில் முன்னெடுத்தது.
"பதவிக்கு வரும் வரை வாக்குறுதிகள் பதவியேற்ற பின்னர் மௌனம் ஏன்?, தாமதிக்காதே கைதிகளை உடன் விடுதலை செய்,இரட்டை வேடத்தை நிறுத்து கைதிகளை விடுதலை செய்,காணாமல் போனோருக்கு பதில் கூறு,உண்ணாவிரதம் நியாயமானதே கைதிகளை உடன் விடுதலை செய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்றுவரை எட்டப்படாமையே போர் எற்படவும்,இளைஞர்கள் அவற்றினால் பாதிக்கப்படவும்,பெரும் அழிவுகள் ஏற்படவும் காரணமாகியது.எனவே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வை நோக்கி நகரும் ஒரு சூழலில் நீண்டகாலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியது நியாயமானது என கட்சியின் வடபிரதேச செயலாளர் செல்வம் கதிர்காமநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே நீண்டகாலம் சிறையில் வாழும் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment